டிபன் பாக்ஸில் கொடுத்து விட ருசியான மாங்காய் பிரியாணி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்கள்!

Summary: சமீப காலமாக பிரியாணி பிரியர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகின்றது. பிரியாணியை பலரும் விரும்பி சாப்பிடுவதால் நம்முடைய வீடுகளில் ஞாயிற்று கிழமைகளில் பிரியாணி அதிகம் சமைக்கப்படுவதுண்டு. நான் வெஜ் சாப்பிடாத, காய்கறி பிரியர்களுக்காக உருவாக்கப்பட்டதே எம்டி பிரியாணி ஆகும். இது பல வகையான மசாலாக்கள் மற்றும் அரிசி கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்தியர்களின் உணவு பழக்கங்களில் பிரியாணி தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கிறது. உணவு பிரியர்கள் மட்டுமின்றி இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உணவாக இருக்கிறது. தென்னிந்தியாவில் பிரியாணிக்கு என்று ஒரு தனி கூட்டம் உண்டு என்றால் அது மிகை அல்ல.

Ingredients:

  • 1 மாங்காய்
  • 1 கப் பாசுமதி அரிசி
  • 2 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1 கிராம்பு, பட்டை
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 கப் புதினா, கொத்தமல்லி
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 மிக்ஸி

Steps:

  1. முதலில் அரிசியை நன்கு அலசி தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் ஊர வைத்துக் கொள்ளவும்.
  2. மாங்காயை தோல் சீவி‌ துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின் அதை மிக்சியில் சேர்த்து அதனுடன், சோம்பு, மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து விழுதாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  3. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, நட்சத்திர சோம்பு தாளித்து கொள்ளவும்.
  4. பிறகு நாம் அரைத்து வைத்துள்ள மாங்காய் விழுது, மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு வதக்கவும்.
  5. அதன்பிறகு அரிசியை தண்ணீர் வடிந்து இதில் சேர்த்து நன்கு கலந்து பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு 30 நிமிடங்கள் வரை மிதமான சூட்டில் வைத்து சமைக்கவும்.
  6. அரிசி நன்கு வெந்ததும் மூடியை அகற்றிவிட்டு புதினா மற்றும் கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
  7. அவ்வளவுதான் சுவையான மாங்காய் பிரியாணி தயார். தயிர் பச்சடி உடன் சேர்ந்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.