இரவு டிபனுக்கு கமகமனு பசலைக்கீரை தோசையை இப்படி ட்ரை பண்ணி பாருங்க! சாப்பிட அருமையாக இருக்கும்!!

Summary: காய்கறி கீரை வகைகளை நம்முடைய குழந்தைகள் எப்போதுமேவிரும்பி சாப்பிட மாட்டார்கள் பசலைக்கீரை கூட்டு, பொரியல் என்றால் வீட்டில் இருக்கும்பெரியவர்களும் சரி, சிறியவர்களும் சரி, விருப்பமாக சாப்பிட பிடிக்காது. ஆனால் அதே பசலைக்கீரையைஅரைத்து இப்படி தோசை வார்த்துக் கொடுத்து பாருங்கள். வீட்டில் இருப்பவர்கள் அனைவரும்விரும்பி சாப்பிடுவார்கள். க்ரீன் தோசை வேணும் வேணும் என்று சொல்லுமளவிற்கு இதன் ருசிஅவ்வளவு அருமையாக இருக்கும். உடல் ஆரோக்கியத்திற்கு பசலைக்கீரை எவ்வளவு முக்கியம் என்பதுநாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயமே. வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Ingredients:

  • 200 கிராம் இட்லி மாவு
  • 1/2 கட்டு பசலைக் கீரை
  • 2 பச்சை மிளகாய்
  • 1 பெரிய வெங்காயம்
  • தேங்காய் எண்ணெய்,
  • உப்பு

Equipemnts:

  • 1 பெரிய பவுள்
  • 1 தோசை கல்

Steps:

  1. வெங்காயம்,ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். பசலைக்கீரையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  2. கடாயில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  3. அடுத்து அதில் பொடியாக நறுக்கிய பசலைக் கீரை, சிறிது உப்பு(கீரைக்கு மட்டும்) சேர்த்து பாதியளவு வெந்ததும் இறக்கவும். இவை அனைத்தையும் இட்லி மாவுடன் சேர்த்து. உப்பு சேர்த்து நன்கு கலக்கிக்கொள்ளவும்.
  4. தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை ஊற்றி, சுற்றி சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
  5. சுவையான சத்தான பசலைக்கீரை தோசை ரெடி