மழைக்கு இதமா சுட சுட சாப்பிட புதினா சிக்கன் கபாப் இப்படி ட்ரை பண்ணி பாருங்க அருமையாக இருக்கும்!

Summary: சிக்கன் நிறைய வெரைட்டி செய்து கொடுக்கும்பொழுது குழந்தைகளுக்கு இருந்து பெரியவங்க வரை எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். பொதுவாக ஒரே மாதிரியான உணவுகள் செய்யும்போது எல்லாருக்குமே ஒரு சலிப்பு வந்துரும். ஆனால் நம்ம ஒரே ஐட்டம் கொஞ்சம் டிஃபரண்டா வேற ஏதாவது மசாலா சேர்த்து பண்ணி கொடுக்கும் போது அவங்களுக்கு அது ரொம்பவே பிடிச்ச விஷயமாக மாறிடும். இன்னிக்கு அம்மா புதுசா செஞ்சுருக்காங்க அப்படிங்கற ஒரு எண்ணம் வந்து அவங்களுக்கு ரொம்ப சந்தோஷத்தை கொடுக்கும். அப்படி இன்னைக்கு நம்ம புதுசா பண்ண போறது புதினா சிக்கன் கபாப் அந்த சிக்கன் கபாப் எப்படி பண்ணலாம்னு பார்க்கலாம் வாங்க.

Ingredients:

  • 1/2 கிலோ சிக்கன்
  • 2 பச்சைமிளகாய்
  • 1 கைப்பிடி புதினா
  • 1 கைப்பிடி கொத்தமல்லி
  • 1 துண்டு இஞ்சி
  • 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு
  • 6 பல் பூண்டு
  • 1/4 கப் மைதா
  • 1 முட்டை
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் சிக்கனை சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, புதினா கொத்தமல்லி தலை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  2. பிறகு சுத்தம் செய்து கழுவி வைத்துள்ள சிக்கனில் அரைத்து வைத்துள்ள புதினா கொத்தமல்லி விழுதை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  3. பிறகு அதில் எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இப்படி கலந்து வைத்துள்ள சிக்கனை ஒரு அரை மணி நேரம் ஊற வைக்கவும். சிக்கன் அரை மணி நேரம் ஊறிய பிறகு அதில் மைதா மாவை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  4. பிறகுஅதில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி அதையும் நன்றாக சேர்த்து கலந்து பிசைந்து எடுத்துக் கொள்ளவும்.
  5. பிறகு அடுப்பில் கடாயை வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.எண்ணெய் காய்ந்த பிறகு அதில் கலந்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை போட்டு பொரிக்கவும்.
  6. சிக்கன் துண்டுகள் இரண்டு புறமும் நன்றாக பொரிந்து வெந்த பிறகு அவற்றை எடுத்து வட்ட வடிவ வெங்காயத்தோடு சேர்ந்து பரிமாறினால் சுவையான புதினா சிக்கன் கபாப் தயார்.