ருசியான திருநெல்வேலி சொதி குழம்பு இப்படி நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!

Summary: திருநெல்வேலி சொதி குழம்பு இட்லி,தோசை, ஆப்பம், சூடான சாதம் என்று எல்லாவற்றுக்குமே சூப்பரான காம்பினேஷன் ஆக இருக்கக்கூடிய இந்த சொதி குழம்பு முற்றிலும் தேங்காய் பால் கொண்டு செய்யப்படுகிறது. எப்போதும் ஒரே மாதிரி குழம்பு வைத்து அலுத்துபோனவர்களுக்கு , இந்த சொதி ஒருமுறை செய்து பாருங்கள்.  திருநெல்வேலி பக்கம் இந்த சொதி குழம்பு மிகவும்பிரபலமானது. ஆப்பத்திற்கு இந்த குழம்பை தொட்டு சாப்பிட மிக மிக அருமையாக இருக்கும்.இது தவிர இட்லி தோசை சுடச்சுட சாதத்தில் போட்டு இந்த சொதி குழம்பை சாப்பிடலாம். பாரம்பரியம்மிக்க இந்த சொதி குழம்பை பக்குவமான முறையில் சுலபமாக எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்துகொள்வதற்காகவே இந்த பதிவு.

Ingredients:

  • 1 முழு தேங்காய்
  • 5 பச்சை மிளகாய்
  • 1 விரல் நீளம் இஞ்சி துண்டு
  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1/4 டீஸ்பூன் கடுகு
  • 1/4 டீஸ்பூன் உளுந்து
  • 1/4 டீஸ்பூன் சீரகம்
  • 2 வர மிளகாய்
  • 1 இணுக்கு கறிவேப்பிலை
  • 2 பூண்டு பல்
  • 10 சின்ன வெங்காயம்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 நீளவாக்கில் நறுக்கிய கத்திரிக்காய்
  • 1/2 கப் உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ்
  • 1/2 கப் வேக வைத்த பாசிப்பருப்பு
  • உப்பு
  • நறுக்கிய மல்லித்தழை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. திருநெல்வேலி சொதி குழம்பு செய்முறை விளக்கம்:சொதி குழம்பு செய்வதற்கு முதலில் ஒரு முழு தேங்காயை துருவி எடுத்து அதை மிக்ஸி ஜாரில்போட்டு நன்கு அரைத்து கெட்டியான முதல் தேங்காய் பால் எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர்அதன் சக்கையை மிக்ஸி ஜாரில் போட்டு மீண்டும் கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைத்து இரண்டாவதுதேங்காய்ப் பாலை எடுத்துக் கொள்ளுங்கள்
  2. பின்னர் மீண்டும் மீதமிருக்கும் சக்கையை போட்டுகடைசியாக தண்ணீர் ஊற்றி அரைத்து நன்கு பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள். மூன்று அளவுகளில்தேங்காய் பாலை நாம் இப்போது எடுத்து வைத்திருக்கிறோம். சின்ன வெங்காயம் மற்றும் மற்ற காய்கறிகளை நீளவாக்கில்மெல்லியதாக நறுக்கிக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியைவையுங்கள். அதில் 2 டேபிள்ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள்.
  3. எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரியவிடுங்கள். கடுகு பொரிந்ததும் உளுந்து மற்றும் சீரகம் சேர்த்து தாளித்து கொள்ளுங்கள்.இவை பொன்னிறமாக வறுபட்டதும் ஒரு இணுக்கு கறிவேப்பிலை மற்றும் 2 வர மிளகாய்களை கிள்ளிசேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள்.
  4. தோல் உரித்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தைஒன்றிரண்டாக நறுக்கி சேர்த்து கொள்ளுங்கள். கொஞ்சம் போல் மஞ்சள் தூள் விருப்பமிருந்தால்சேர்த்துக் கொள்ளுங்கள். சிலர் வெள்ளையாக சொதி செய்வது உண்டு. இதனுடன் இரண்டு பூண்டுபற்களை பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்து லேசாக வதக்கிக் கொள்ளுங்கள்.
  5. அதற்குள் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக்கொள்ளுங்கள். அதில் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி துண்டுகளை சேர்த்து நன்கு கொரகொரவென்றுஅரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை வாணலியில் சேர்த்து நன்கு பச்சை வாசம்போக வதக்கி விடுங்கள்.
  6. அதன் பிறகு நீங்கள் நீளவாக்கில் பொடியாக நறுக்கிவைத்துள்ள காய்கறிகளை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். 2 நிமிடம் இவற்றை வதக்கியபின்பு மூன்றாவதாக எடுத்த தேங்காய் பாலை சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். பத்து நிமிடம்தேங்காய் பாலுடன் சேர்த்து காய்கறிகள் அனைத்தும் கொதித்து வந்த பிறகு இரண்டாவதாக எடுத்துவைத்த தேங்காய் பாலை சேர்த்து அதனுடன் வேக வைத்துள்ள பாசிப்பருப்பு கால் கப் அளவிற்குசேர்க்க வேண்டும்.
  7. அப்போது தான் சொதி கெட்டியாக வரும். பாசிபருப்புஇல்லை என்றால் பொட்டுகடலை 2 டேபிள் ஸ்பூன் கெட்டியாக அரைத்து சேர்த்துக் கொள்ளுங்கள்.பின்னர் இவை கொதித்ததும் முதலில் எடுத்த பாலை சேர்த்து அடுப்பை குறைந்த தீயில் வைத்துகொள்ள வேண்டும்.
  8. பின்பு இதற்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள். கடைசியாகத் தான் உப்பு சேர்க்க வேண்டும். இல்லை என்றால் சொதி திரிந்துவிடும்.ஒரு கொதி வந்ததும் நறுக்கிய மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைத்து விடுங்கள்.
  9. இந்த சுவையான திருநெல்வேலி சொதி இட்லி, தோசை,ஆப்பம், இடியாப்பம் மற்றும் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள சூப்பராக இருக்கும், ட்ரை பண்ணிபாருங்க.