தீபாவளி ஸ்பெஷல் மோட்டிச்சூர் லட்டு இப்படி சுலபமாக வீட்டிலயே செய்து விடலாம்! வாயில் வைத்தவுடன் கரையும்!

Summary: கடைகளில் தயாரிக்கும் இனிப்பும் காரவகை சிற்றுண்டிவாங்கி ஊனத்தை விட வீட்டில் இந்த முறையில் செய்தால் அனைவரும் விரும்பி உண்பார்கள்..அதுமட்டுமல்லாமல் இப்போது சாப்பிடுகின்ற உணவு வகைகளில் உடம்பிற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதில்லை. எனவே உடல்நிலையை சரியாக கவனித்துக் கொள்வதற்கு வீட்டிலேயே சிற்றுண்டி சமைக்க வேண்டும், மோட்டிச்சூர்லட்டு வீட்டிலேயே செய்தால் அருமையாகவும் இருக்கும், ஆரோக்கியமாக இருக்கும். வாருங்கள்இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Ingredients:

  • 1 கப் கடலை மாவு
  • 1 மேசைக்கரண்டி பொடித்த ரவை
  • 1 கப் சர்க்கரை
  • 1 சிட்டிகை ஆரஞ்சு கலர்
  • 1/2 கப் தண்ணீர்
  • 2 மேசைக்கரண்டி முந்திரி, பாதாம் (சீவியது)
  • 1 தேக்கரண்டி ஏலக்காய் பொடி
  • 1 சிட்டிகை குங்குமப்பூ
  • 2 மேசைக்கரண்டி நெய்
  • 12 மேசைக்கரண்டி வெந்நீர்
  • எண்ணெய்
  • 1 மேசைக்கரண்டி பொடித்த பாதாம்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்
  • 1 பூந்தி கரண்டி

Steps:

  1. தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, பொடித்த ரவை இரண்டையும் சலித்து போட்டு, ஆரஞ்சு கலர் பவுடர் மற்றும் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைக்கவும்.
  3. (கடலைமாவுக் கரைசல் பதம் முக்கியம். அதிகம் நீர்த்துவிட்டால் உருண்டையான பூந்திகளாக வராது).
  4. அடிகனமான பாத்திரத்தில் சீனியுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும்.பாகு கம்பி பதம் வந்தவுடன் ஏலக்காய் பவுடர், குங்குமப்பூ, பொடித்த பாதாம் சேர்த்து கலந்து வைக்கவும்.
  5. (இந்தப் பாகு சற்று சூடாகவே இருக்க வேண்டும். ஆறிவிட்டால் பூந்தியில் சேர்ப்பதற்கு முன்பு சிறிது சூடாக்கிக் கொள்ளலாம். பாகு பதம் மாறிவிடக்கூடாது).
  6. கடாயில் எண்ணெயைச் சூடாக்கி, பூந்தி கரண்டியை பிடித்துக் கொண்டு கடலை மாவு கரைசலை அதில் ஊற்றி பூந்தி கரண்டியை தட்டவும்.
  7. (சூடானஎண்ணெயில் மாவு விழுந்து பூந்திகளாக எழும்ப ஆரம்பிக்கும்). ஒன்றிலிருந்து இரண்டு நிமிடத்தில் முத்து முத்தாக மென்மையாக பொரிந்திருக்கும் (மொறுமொறுப்பாக இருக்கக்கூடாது).
  8. எண்ணொயை வடித்தெடுத்து பூந்தியை ஒரு பாத்திரத்தில் போடவும். அதனுடன் சூடாக இருக்கும் சீனிப்பாகு, சீவிய முந்திரி மற்றும் பாதாம் சேர்த்து கரண்டியால் கலக்கவும்.
  9. இந்தக் கலவையை ப்ளெண்டர் அல்லது மிக்ஸியின் பெரிய ஜாரில் போட்டு, ஒரு மேசைக்கரண்டி வெந்நீர் சேர்த்து ஒன்றிரண்டு சுற்று சுற்றியெடுக்கவும்.
  10. பூந்திகள் உடைந்து ஒன்றோடொன்று சேர்ந்திருக்கும். அதை மற்றொரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும். கையில் நெய் தடவிக் கொண்டு பூந்திக் கலவையை எடுத்து லட்டுகளாக உருட்டி வைக்கவும்.
  11. சுவையான,ஜூஸியான மோட்டிச்சூர் லட்டு (Motichoor Laddu) தயார்.