சுவையான சிக்கன் தம் பிரியாணி செய்வது எப்படி ?

Summary: இன்று பிரியாணி பற்றி தான் பார்க்க இருக்கிறோம் அதிலும் பிரியாணி பல வகைகளில் செய்வோம் அதிலும் மிகவும் அதீத சுவையை தரும் பிரியாணி என்றால் தம் பிரியாணி தான். ஆகையால் இன்று நாம் சுவையான சிக்கன் தம் பிரியாணி தான் செய்து பார்க்க போகிறோம். இப்படி நீங்கள் இந்த முறையில் சிக்கன் தம் பிரியாணி செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடித்தப் போக எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள். உங்கள் வீட்டில் உள்ள சிரியவர்கள் முதல் பெரியோர்கள் வரை எல்லோரும் இனி இந்த பிரியாணியை அடிக்கடி செய்து தர சொல்லுவார்கள்.

Ingredients:

  • 1 பிரியாணி இலை
  • 1 பட்டை
  • 2 நட்சத்திர சோம்பு
  • 1 ஜாவுத்திரி
  • 3 ஏலக்காய்
  • 4 கிராம்பு
  • 2 tbsp மல்லி
  • 1 tbsp சீரகம்
  • 1 tbsp மிளகு
  • ½ tbsp சோம்பு
  • 1 பெரிய துண்டு இஞ்சி
  • 4 பல் பூண்டு
  • 3 பச்சை மிளகாய்
  • 1 கொத்து கொத்துமல்லி
  • ¾ kG சிக்கன்
  • வறுத்து அரைத்த பொடி
  • ½ tbsp மஞ்சள் தூள்
  • 2 tbsp மிளகாய் தூள்
  • உப்பு
  • 2 tbsp எண்ணெய்
  • 4 tbsp தயிர்
  • பொரித்த வெங்காயம்
  • 1 பழம் எலுமிச்சை சாறு
  • 1 tbsp எண்ணெய்
  • 1 பிரியாணி இலை
  • 1 பட்டை
  • 1 நட்சத்திர சோம்பு
  • 2 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • 12 கப் பாஸ்மதி அரிசி
  • உப்பு
  • 2 tbsp நெய்
  • 1 கொத்து புதினா
  • 1 கொத்து கொத்தமல்லி
  • 3 நீள்வாக்கில் நறுக்கிய வெங்காயம்

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பாத்திரம்
  • 1 பெரிய பவுள்
  • 2 பவுள்
  • 1 சோறு வடிக்கும் பாத்திரம்

Steps:

  1. முதலில் பிரியாணி செய்வதற்கு ஃபிரெஷ் ஆனா மசாலா பொருட்கள் சேர்த்து செய்தால் பிரியாணி சுவையாக வரும் அதற்காக முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து பிரியாணி இலை, பட்டை, நட்சத்திர சோம்பு, ஜாவித்திரி, ஏலக்காய், கிராம்பு, மல்லி, சீரகம், மிளகு மற்றும் சோம்பு போன்ற பொருட்களை சேர்த்து மிதமான தீயில் வறுத்து கொள்ளுங்கள்.
  2. பின்பு நாம் வறுக்கும் பொருட்கள் நல்ல வாசனை வரும் பொழுது கடாயை இறக்கி வறுத்த பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு வேறொரு மிக்ஸி ஜாரில் ஒரு பெரிய இஞ்சி துண்டை பொடி பொடியாக நறுக்கி சேர்த்து பின் இதனுடன் பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து அரைத்து கொள்ளுங்கள்.
  3. பின்பு முன்று வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கி ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் நாம் நறுக்கிய வெங்காயங்களை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை பொறித்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு ஒரு பெரிய பவுலில் நாம் வைத்திருக்கும் சிக்கனை சேர்த்து அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் பொடி மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்துக் கொள்ளவும்.
  4. மேலும் இந்த சிக்கனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், எண்ணெய், தயிர், ஒரு பழம் எலுமிச்சை சாறு மற்றும் நாம் பொறித்த வெங்காயத்தில் சிறிது சேர்த்து நன்றாக பிரட்டி விட்டுக் கொள்ளுங்கள் பின் இந்த மசாலா கலவையை இரண்டு மணி நேரங்கள் அப்படியே நன்றாக ஊற வைத்து விடுங்கள். பின்பு ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் பாஸ்மதி அரிசி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
  5. அதன் பின்பு ஒரு சோறு வடிக்கும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் பிரியாணி இலை, பட்டை, நட்சத்திர சோம்பு, கிராம்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்றாக தாளித்துக் கொள்ளுங்கள். பின் இதனுடன் 12 கப் அளவு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள்.
  6. பின்பு தண்ணீர் கொதித்து வந்ததும் நாம் வைத்திருக்கும் பாஸ்மதி அரிசியை இதனுடன் சேர்ந்து வேக வையுங்கள், அரிசி நன்றாக வெந்ததும் சோறை வடிகட்டி தனியாக எடுத்துக் கொள்ளுங்கள் பின்பு வேறொரு பெரிய பாத்திரத்தில் சிறிது என்னை ஊற்றி நாம் மசாலா கலந்து வைத்த சிக்கனை இதில் சேர்த்து மூடி வைத்து வேக வைத்துக் கொள்ளுங்கள் ஒரு 15 நிமிடங்கள் சிக்கன் நன்றாக வெந்ததும் கிரேவி மாதிரி தயாராகி இருக்கும்.
  7. அதன் பின் கிரேவியில் சிறிதளவு தனியாக ஒரு பவுளில் எடுத்துக் கொண்டு பின்பு சிக்கனின் மீது சிறிது நாம் வடித்த சாதத்தை வைத்து அதன் மேல் வைத்திருக்கும் கொத்தமல்லி இலையை மற்றும் பொறித்த வெங்காயத்தை தூவி விட்டு அதன் மேல் நாம் தனியாக எடுத்து வைத்த கிரேவி பாதி ஊற்றி விடுங்கள்.
  8. அதன் மேல் மீதி இருக்கும் சாதத்தை சேர்த்து அதன் மேல் கொத்தமல்லி இலைகளை தூவி மீதி இருக்கும் கிரேவியை ஊற்றி பொறித்த வெங்காயத்தையும் சேர்த்து கொண்டு சிறிதளவு நெய்யை மேற்புறத்தில் ஊற்றி மூடி வைத்துவிட்டு அதன் மேல் கனமான பொருளை வைத்து விடுங்கள். பின் ஒரு 15 நிமிடங்கள் குறைந்த அளவு தீயில் தம் போட்டுக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் மிகவும் சுவையான சிக்கன் தம் பிரியாணி இனிதே தயாராகிவிட்டது.