சுட சுட சாதத்துடன் போட்டு சாப்பிட ருசியான பாகற்காய் புளிக்குழம்பு இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

Summary: நாம் தினசரி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்று தான் புளி குழம்பு, இந்த புளிக்குழம்பு பல்வேறு வகையில் வேறு வேறு விதமான காய்கறிகளை வைத்து நாம் செய்து சாப்பிடுகிறோம். அதில் இன்று நாம் சின்ன பாகற்காய் புளிக்குழம்பு பற்றி தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம். பாகற்காயின் மகத்துவம் நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் பாகற்காய் என்றாலே கசக்கும் என்று பலபேர் இதை சாப்பிட மாட்டார்கள். இந்த பாகற்காயை வைத்து நீங்கள் பொரியல் செய்து இருப்பீர்கள்..! ஆனால் குழம்பு செய்து இருக்கிறீர்களா..! ஆனால் பாகற்காய் குழம்பு வைத்தால், குழந்தைகள் சாப்பிட மறுக்கிறார்கள் என்பது பலரது புலம்பல். காரணம், பாகற்காயில் உள்ள கசப்பு சுவை! பக்குவமாக, கசப்பு தெரியாமல் பாகற்காய் குழம்பு வைக்க முடியும். அதைச் செய்தால் குழந்தைகள் பாகற்காய் குழம்பையும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 1 பெரிய பாகற்காய்
  • 10 சின்ன வெங்காயம்
  • 8 பல் பூண்டு
  • 1 தக்காளி
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • புளி
  • எண்ணெய்
  • உப்பு தேவையான அளவு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 3 காய்ந்த மிளகாய்
  • 1 டீஸ்பூன் தனியா
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1/4 டீஸ்பூன் வெந்தயம்
  • 1/4 டீஸ்பூன் மிளகு

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் பாகற்காயை நன்கு கழுவி, வட்டவடிவில் வெட்டி வைத்துக் கொள்ளவும்.
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தனியா, சீரகம், வற்றல் மிளகாய், வெந்தயம், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி தனியாக எடுத்து வைத்து ஆற வைத்துக் கொள்ளவும்.
  3. சூடு ஆறியவுடன் ஒரு மிக்ஸியில் சேர்த்து, அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து கொள்ளவும்.
  4. பின் அதே கடாயில் எண்ணெய் ஊற்றி, வெட்டி வைத்துள்ள பாகற்காயை நன்கு வதக்கி வைத்துக் கொள்ளவும்.
  5. மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  6. பின்னர் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  7. மசாலாவின் பச்சை வாசனை போனதும் புளி தண்ணீர் சேர்த்து மூடி போட்டு கொதிக்க விடவும்.
  8. குழம்பு கொதிக்க ஆரம்பித்தவுடன், வறுத்து வைத்துள்ள பாகற்காய், உப்பு சேர்த்து கலந்து மிதமான சூட்டில் வேகவிடவும்.
  9. பாகற்காய் வெந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
  10. அவ்வளவுதான் சுவையான பாகற்காய் புளிக்குழம்புகுழம்பு சுவைக்கத்தயார்.