வீட்டில் அனைவரும் ஆச்சர்யபடும் வகையில் காடை குழம்பு இப்படி செஞ்சி கொடுங்க! அப்புறம் பாராட்டு மழை தான்!

Summary: இந்த காடை குழம்பு பிரியாணி, நாண், சப்பாத்தி என் அனைத்திற்கும் வைத்து சாப்பிடும் விதத்தில் சுவை அருமையாக இருக்கும். வீட்டில் உள்ள அனைவரும் இதனை விரும்பிசாப்பிட்டு அடிக்கடி செய்யுமாறு கேட்பார்கள். அதோடு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும். காடையில் மிகக் குறைவான கொலஸ்ட்ராலும், கோழியைவிடக் கூடுதல் உயிர்ச்சத்துப் பயனும் உள்ளது. குறைந்த கொழுப்புள்ள காடை, கோழி பிரியர்களுக்கு பரிசு. இதை வெறுமனே ரசித்து உண்பதற்கும் ஒரு கூட்டமே இருக்கத்தான் செய்கிறது. வழக்கமாக மட்டன், சிக்கன், மீன் என எப்போதும் ஒரே மாதிரியே சாப்பிடும் நீங்கள் இந்த காடை குழம்பை ட்ரை பண்ணி பாருங்கள்.

Ingredients:

  • 4 காடை
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 துண்டு இஞ்சி
  • 5 பல் பூண்டு
  • 1 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 10 வர மிளகாய்
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • 2 டீஸ்பூன் மல்லி தூள்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் காடையை நன்கு கழுவி சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும்.
  2. ஒரு‌ கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, சோம்பு, சீரகம், மிளகு, மிளகாய் சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  3. பின் அதே கடாயில் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். அதனுடன் இஞ்சி, பூண்டு, மல்லித்தூள், மஞ்சள்தூள் மற்றும் தேங்காய் சேர்த்து நன்றாக வதக்கி ஆற விடவும்.
  4. நாம் அரைத்து வைத்துள்ளவை நன்கு ஆறியதும் ஒரு‌ மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  5. ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  6. வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கி நாம் அரைத்த விழுதை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி போட்டு ‌பச்சை வாசனை போற அளவுக்கு கொதிக்கவிடவும்.
  7. பின்னர் காடை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். காடை வெந்ததும் மல்லி இலை தூவி இறக்கவும்.
  8. அவ்வளவுதான் சுவையான மற்றும் சூடான காடை குழம்பு தயார்.