ருசியான சாமை காரப்புட்டு அசத்தலான சுவையில் சில நிமிடத்தில் இப்படி செஞ்சு பாருங்க!

Summary: புட்டு வகைகள் என்றாலே, உடல் ஆரோக்கியத்திற்குமிகவும் நல்லது. அதிலும், குறிப்பாக சாமை மாவில் செய்யும் சாமை புட்டு, உடலுக்கு அதிகப்படியானசத்தை சேர்க்கும். குழந்தைகளுக்கு இந்தப் புட்டு மிகவும் பிடிக்கும். இனிப்பு புட்டுசாப்பிட  சில பேர் வீட்டில் சிரமப்படுவார்கள்.அதிகமாக சாப்பிட்டால் திகட்டும் என்பதால். ஆனால், சிரமமே இல்லாமல் இட்லி பானையில்,சாமை காரப்புட்டை சுலபமாக வீட்டில் செய்திடலாம். ஆரோக்கியம் மிகுந்த சாமை கார புட்டு எப்படிசெய்வது? என்பதை நாமும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

Ingredients:

  • 1/2 கிலோ சாமை அரிசி மாவு
  • 1 தக்காளி
  • 100 கிராம் சின்ன வெங்காயம்
  • 4 காய்ந்த மிளகாய்
  • உப்பு
  • எண்ணெய்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 1 டீஸ்பூன் கடலைப் பருப்பு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1 கைப்பிடி கொத்தமல்லி இலை

Equipemnts:

  • 1 இட்லி பாத்திரம்
  • 1 பெரிய பாத்திரம்

Steps:

  1. சாமை அரிசி மாவைச் சலித்து, அதனுடன் சீரகம், சிறிது உப்பு கலந்து புட்டு பதத்துக்குப் பிசைந்து, ஐந்து நிமிடங்கள் ஊறவைத்து, ஆவியில் 10 நிமிடங்கள் வேகவிடவும்.
  2. கடாயில் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, பிறகு சின்ன வெங்காயம், மிளகாய், தக்காளி, உப்பு சேர்த்து, நன்கு சுருண்டு வரும் வரை வதக்கவும்.
  3. பின், வேகவைத்த சாமைப் புட்டைச் சேர்த்து நன்கு கலக்கவும். கொத்தமல்லி இலையைத் தூவி இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் மூடி வேகவிட்டு எடுக்கவும்.
  4. இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள்: இதனுடன் சுண்டல் மசாலா குழம்பு சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.