தீபாவளி ஸ்பெஷல் மொறு மொறுனு கேழ்வரகு மிச்சர் இப்படி வீட்டில் சுலபமாக செஞ்சி பாருங்க!

Summary: ஆரோக்கியமான குழந்தைகள் சிற்றுண்டி ரெசிபிகேழ்வரகு மிச்சர். ராகி  ஃபிங்கர் மில்லடில்செய்யப்படும் பாரம்பரிய சிற்றுண்டியாகும். கேழ்வரகில் புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து,நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தயமின், கார்போஹைட்ரேட் என அனைத்து சத்துக்களும் இருப்பதால் உடலுக்கு வலுவைக் கூட்டுவதில் முதலிடத்தில் இருக்கிறது. குழந்தைகளுக்கான சிறந்த மாலை நேர சிற்றுண்டி மற்றும் நாளின் எந்த நேரத்திலும் உண்ணலாம் மற்றும் நீண்டகாலத்திற்கு சேமித்து வைக்கலாம். இந்த சிற்றுண்டி ராகி மாவில் இருந்து தயாரிக்கப்படும்மிகவும் சத்தான மற்றும் ஆரோக்கியமான சிற்றுண்டிகளில் ஒன்றாகும். .வாங்கஇதை கேழ்வரகு மிச்சர் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Ingredients:

  • 2 கப் கேழ்வரகு மாவு
  • 1/4 கப் வேர்க்கடலை
  • 1/4 கப் பொட்டுக்கடலை
  • உப்பு
  • 4 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. கேழ்வரகை அரைத்து மாவாக்கிக் கொள்ளவும்.
  2. அதில், தேவையான உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து தண்ணீர் விட்டு முறுக்கு மாவு பதத்தில் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
  3. அந்த மாவை மிக்சர் பிழியும் நாழியில் போட்டு, காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
  4. இதனுடன்,தலா 50 கிராம் வேர்க்கடலை, பொட்டுக்கடலை, பொரித்த அவல் சேர்த்து கிளறவும். கேழ்வரகு மிக்சர் ரெடி!