சுவையான முள்ளங்கி சட்னி செய்வது எப்படி ?

Summary: நீங்கள் புதியதாக ஏதேனும் சட்னி செய்ய விருப்பப்பட்டீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த முள்ளங்கி சட்னியை செய்து பாருங்கள். பெரும்பாலும் முள்ளங்கியிலிருந்து ஒரு வித வாசனை வரும் இதனாலே பெரும்பாலும் யாரும் முள்ளங்கியை உணவில் சேர்த்துக் கொள்வது கிடையாது. ஆனால் இன்று நாம் இந்த முள்ளங்கியை சட்னி செய்யும்போது எந்த வித வாசனையும்யு வராது அதற்கு மாறாக அட்டகாசமான சுவையுடன் இருக்கும். மேலும் முள்ளங்கியில் அதிகளவிலான நீர் சேர்த்து மற்றும் நார் சத்துக்கள் இருப்பதால் நம் உடலுக்கும் ஆரோக்கியத்தை தரும்.

Ingredients:

  • 3  tbsp எண்ணெய்
  • 1 tbsp கடலை பருப்பு
  • 1 tbsp உளுந்த பருப்பு
  • கருவேப்பிலை
  • 4 வரமிளகாய்
  • 1 துண்டு புளி
  • 1 துண்டு இஞ்சி
  • 10 சின்ன வெங்காயம்
  • 5 பல் பூண்டு
  • 3 முள்ளங்கி சிறியது
  • 1 கப் தேய்காய்
  • 1 கொத்து கொத்தமல்லீ
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும், எண்ணெய் நன்கு காய்ந்ததும் இதனுடனன ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு மற்றும் ஒரு டீஸ்பூன் உளுந்தம் பருப்பு சேர்த்து சிவக்கும் வரை நன்றாக வறுத்துக் கொள்ளுங்கள்.
  2. அதன் பின்பு சிறிது கருவேப்பிலை, 5 வர மிளகாய் மற்றும் ஒரு துண்டு புளி சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். வர மிளகாய் நன்றாக வறுப்பட்டு வந்ததும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து குளிர வைத்துக் கொள்ளுங்கள்.
  3. பின்பு மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும், இதனுடன் ஐந்து பல் பூண்டு மற்றும் பத்து சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பின் வெங்காயம் ஓரளவு வெந்தவுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் முன்று முள்ளங்கியை சேர்த்து கிளறிவிட்டு வதக்கி கொள்ளுங்கள்.
  4. வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்தவுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் ஒரு கப் தேங்காய் மற்றும் ஒரு கைப்பிடி கொத்தமல்லி சேர்த்து நன்றாக கிளறிவிட்டு வதக்கவும்.
  5. பின் அனைத்து பொருட்களும் நன்றாக வதங்கியதும், இதையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து இதனுடன் ஒரு துண்டு இஞ்சி, தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மை போல அரைத்துக் கொள்ளுங்கள்.
  6. பின்பு சட்னியை ஒரு பவுளில் மாற்றி விட்டு கடாயை மறுபடியும் அடுப்பில் வைத்து இரண்டு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில கடுகு, உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளிக்கவுய், அந்த தாளிப்பையும் சட்னியுடன் சேர்த்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் சுவையான முள்ளங்கி சட்னி தயாராகிவிட்டது.