சுட சுட சாதத்துடன் சாப்பிட பக்காவான வாழைப்பூ மிளகு மசாலா பெரியல் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

Summary: பொதுவாக நாம் அடிக்கடி கேரட், பட்டாணி, கோஸ், பீன்ஸ், முருங்கைக்காய் போன்றவற்றை அதிகமாக செய்து சாப்பிட்டு இருப்போம். வாழைப்பூ போன்ற துவர்ப்பு சுவை கொண்ட காய்கறிகளை அதிகமாக எடுத்துக் கொள்ள மாட்டோம். ஆனால் வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், மலட்டுத்தன்மை நீங்கி குழந்தைப்பேறு கிடைக்கும். வாழைப்பூவில் பொரியல் செய்து கொடுத்தாலோ குழம்பு செய்து கொடுத்தாலோ கட்டாயமாக வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வேண்டாம் என்று தான் சொல்வார்கள். இத்தகைய மருத்துவ குணங்கள் நிறைந்த வாழைப்பூவில் மிளகு மசாலா எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்! இந்த வாழைப்பூ மிளகு மசாலா மிகவும் சுவையாக இருப்பதோடு, செய்வதற்கு சற்று சுலபமாகவும் இருக்கும்.

Ingredients:

  • 1 வாழைப்பூ
  • 1 பெரிய வெங்காயம்
  • 5 பல் பூண்டு
  • 1 1/2 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1/4 டீஸ்பூன் கடுகு
  • 1/4 டீஸ்பூன் சோம்பு
  • உப்பு தேவையான அளவு
  • 2 வர மிளகாய்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 கரண்டி

Steps:

  1. முதலில் வாழைப்பூவை பிரித்து அதில் உள்ள‌ நரம்பை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொஞ்சம் மோர் கலந்த தண்ணீரில் போட்டு வைக்கவும்.
  2. ஒரு‌ வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சோம்பு, வற்றல், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  3. பிறகு நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள ‌வாழைப்பூவை சேர்த்து வதக்கி சிறிதளவு தண்ணீர் விட்டு பத்து நிமிடங்கள் மூடி வைத்து வேகவைக்கவும்.
  4. வாழைப்பூ சற்று வெந்ததும் மிளகுத் தூள், உப்பு சேர்த்து கலந்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
  5. பின்பு தேங்காய் துருவல், நறுக்கிய மல்லி இலை தூவி இரண்டு நிமிடங்கள் நன்கு வதக்கி அடுப்பை அணைத்து விடவும்.
  6. அவ்வளவுதான் மிகவும் சுவையான வாழைப்பூ மிளகு மசாலா வதக்கல் தயார்.