ஸ்ட்ராபெர்ரி ,தயிர் சேர்த்து சுவையான ஸ்ட்ராபெர்ரி லஸ்ஸி இப்படி செய்து கொடுங்க!

Summary: தயிர் என்றாலே பிடிக்காதவர்கள் என்று எவரும் இருக்க மாட்டார்கள், உடம்புக்கு தேவையான கால்சியம் சத்தையும் கொடுக்கிறது.எனவே தினமும் இரண்டு ஸ்பூன் தயிரையாவது அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும். தயிருடன் சர்க்கரை சேர்த்து குடிப்பது தான் லஸ்ஸி எனப்படும். அவ்வாறு தயிரை அப்படியே சாப்பிடும்பொழுது ருசியாக இருக்கும். சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் சொல்லவா வேண்டும்,அவ்வளவு அற்புதமான சுவையில் இருக்கும். லஸ்ஸி பிடிக்காதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள்.வாருங்கள் இந்த லஸ்ஸியை ஸ்ட்ராபெர்ரி சேர்த்து ஸ்ட்ராபெர்ரி லஸ்ஸி செய்ய முடியும் என்பதைபற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Ingredients:

  • 8 ஸ்ட்ராபெர்ரி பழங்கள்
  • 2 கப் தயிர்
  • 1 கப் தண்ணீர்
  • 8 பாதாம்
  • 8 பிஸ்தா
  • 5 மே.கரண்டி சீனி

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Steps:

  1. 4 முதலில் ஸ்ட்ராபெர்ரி பழத்தைச் சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போடவும்.
  2. இதனுடன் தயிர், தண்ணீர், சீனி, பாதம், பிஸ்தா சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
  3. பிறகு ஒரு டம்ளரில் லஸ்ஸி ஊற்றி ஐஸ் கட்டி சேர்த்து மேலே சிறுது நறுக்கிய பாதம் தூவி பருகலாம்.