கல்யாண வீடுகளில் செய்யப்படும் பூசணி அல்வா தளதளன்னு ரொம்ப சுவையா வீட்டிலேயே சில நிமிடத்தில் இப்படி செய்யலாம்!

Summary: கல்யாண வீட்டு இனிக்கிற தளதள பூசணிக்காய் அல்வாவீட்டிலேயே அருமையாக செய்யலாம். அல்வா என்றதுமே பலருக்கும் ஞாபகத்திற்கு வருவது திருநெல்வேலிஅல்வா தான். திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா என்றால் தெரியாதவர் யாரும் இருக்க மாட்டார்கள்.அந்த அளவிற்கு இந்த அல்வா ஃபேமஸ். அதே போல் தான் பூசணிக்காயை வைத்து செய்யும் இந்தஅல்வாவும் இதன் சுவை பிரமாதமாக இருக்கும். அது மட்டும் இன்றி மற்ற அல்வாக்களை போல்இல்லாமல், இதை செய்வது மிக மிக சுலபம் செலவும் மிகக் குறைவு, நேரமும் குறைவு இப்படிஒரு சுலபமான , சுவையான பூசணிக்காய் அல்வா ரெசிபியை எப்படி செய்வது தெரிந்து கொள்ள தான்இந்த பதிவு.

Ingredients:

  • 1/4 கிலோ பூசணிக்காய்
  • 1/2 கிலோ சர்க்கரை
  • 1/4 லிட்டர் பால்
  • 100 மி.லி நெய்
  • 6 முந்திரி
  • 3 ஏலக்காய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. பூசணிக்காயைத்தோல் சீவித் துருவிக் கொள்ளவும். முந்திரியை உடைத்து இரண்டு ஸ்பூன் நெய் விட்டுபொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைக்கவும். பால் நன்கு கொதிக்கும்போது பூசணிக்காயைப் போட்டு மூடி வேக வைக்க வேண்டும்.
  3. பூசணிக்காய் பாதி வேகும் போது மெதுவாக கிளறிவிடவும். நன்றாக வெந்து குழைந்து வரும்போது தேவையான அளவிற்கு சர்க்கரையை போட்டு நன்கு கலக்கி விடவும்.
  4. சர்க்கரையை போட்டதும் அடிப்பிடித்துக் கொள்ளாதவாறு அடிக்கடி கிளறிக் கொண்டே இருக்கவும்.
  5. பின்னர் நெய்யைச் சிறிது சிறிதாக ஊற்றி கிளற வேண்டும். அதனுடன் வறுத்த முந்தரியை போட்டுக் கிளறவும். சுவையான அல்வா ரெடி..