நாட்டு கோழி வாங்கி இப்படி ஒரு முறை மிளகு வறுவல் ட்ரை பண்ணி பாருங்க! வாசனை பக்கத்து வீடு வரை செல்லும்!

Summary: சிக்கனை விரும்பாத அசைவ பிரியர்கள் இல்லை என்று தான் கூற வேண்டும். ஆம் பிராய்லர் கோழிகளை விட நாட்டுக்கோழிகளே சிறந்தது என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருந்தாலும், பிராய்லர் கோழிகளை வாங்குவதற்கே போட்டி போட்டு நிற்கின்றனர். சிக்கனில் பல வெரைட்டிகள் உள்ளன. அதிலும் பொதுவாக அசைவ உணவுகள் என்றாலே காரம் தான் முக்கியம். அவ்வாறு நன்கு காரசாரமாக இருக்கும் ஒரு சிக்கன் ரெசிபியெனில் அது சிக்கன் மிளகு வறுவல் தான். இந்த மிளகு சிக்கன் வறுவல் சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். குறிப்பாக இது பேச்சுலர்கள் செய்யும் வகையில் சுலபமான செய்முறையைக் கொண்டது. சிலர் காரசாரமாக சாப்பிட விரும்புவார்கள். இன்று சிக்கனில், மிளகு சேர்த்து காரசாரமான வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

Ingredients:

  • 1/2 கி நாட்டுக்கோழி
  • 4 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 2 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் மிளகு தூள்
  • கொத்தமல்லி
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய்
  • 1 துண்டு பட்டை
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 2 டீஸ்பூன் சீரகம்
  • 2 கிராம்பு
  • 2 டீஸ்பூன் மிளகு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் நாட்டு கோழியை நன்கு கழுவி மஞ்சள் சேர்த்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
  2. பிறகு ஒரு மிக்ஸியில் மிளகு, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு விழுதாகஅரைத்து வைத்துக் கொள்ளவும்.
  3. ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், சோம்பு சேர்த்து தாளித்து வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. பிறகு வெங்காயம் பொன்னிறமாக வெந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதன்பிறகு தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு மசித்து வதக்கவும்.
  5. பிறகு இதில் கோழியை சேர்த்து நன்கு கிளறி தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி போட்டு வேக வைக்கவும்.
  6. பிறகு நாம் அரைத்த வைத்துள்ள விழுது மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்றாக கிளறி விடவும். அடுப்பை குறைவான தீயில் வைத்து சிக்கன் வேகும் வரை மூடி வைத்து வேக விடவும்.
  7. தண்ணீர் வற்றி சிக்கன் வெந்ததும் கொத்தமல்லி தூவி அடுப்பை அணைத்து விடவும்.
  8. அவ்வளவுதான் சுவையான நாட்டு கோழி மிளகு வறுவல் தயார்.