சீப்பு முறுக்கு அல்லது சீப்பு சீடை இப்படி செஞ்சி பாருங்க! தீபாவளி பலகார ரெசிபி!

Summary: சீப்பு முறுக்கு செய்யும் போது சுற்றி நிறைய குழந்தைகளை உட்கார வைத்துவிட்டு இதே மாதிரி செய்யுங்கன்னு சொல்லி அம்மா மாவு கொடுப்பாங்க எல்லாம் ஒன்னும் உட்கார்ந்து தீபாவளிக்கு பலகாரம் செய்து அதை சாப்பிட சுவையே ஒரு தனி சுவைதான். இப்போ எல்லாரும் அந்த மாதிரி பண்றது கிடையாது 90 கள் காலங்களில் தீபாவளி பண்டிகைக்கு பலகாரம் செய்வதில்லை முக்கிய பங்கு வகிக்கிறது அந்த வீட்ல இருக்கிற குழந்தைகள் தான்.

Ingredients:

  • 1 கப் பச்சரிசி மாவு
  • 3 ஸ்பூன் பாசிப்பருப்பு
  • 1 கப் தேங்காய் பால்
  • 1 ஸ்பூன் எள்
  • 3 ஸ்பூன் சீனி
  • 2 ஏலக்காய்
  • 2 ஸ்பூன் வெண்ணெய்
  • உப்பு
  • எண்ணெய்
  • 5 கொய்யா இலைகள்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் பாசிப்பருப்பை சேர்த்து நன்றாக வாசனை வரும் வரை வறுத்தெடுத்துக் கொள்ளவும். வறுத்தெடுத்த பாசிப்பருப்பை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி விட்டு அதில் பச்சரிசி மாவை சேர்த்து லேசாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
  2. பின் பச்சரிசி மாவு பாசிப்பருப்பை சேர்த்து நன்றாக ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்து எடுத்துக் கொள்ளவும். பொடித்து எடுத்து வைத்துள்ள மாவை ஒரு சல்லடை வைத்து நன்றாக சலித்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும்.
  3. சலித்து எடுத்து வைத்துள்ள மாவில் ஒரு ஸ்பூன் எள்ளு சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு ஸ்பூன் வெண்ணெயும் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  4. பிறகு தேங்காயை துருவி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து ஏலக்காய் , சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்து வைத்துள்ள தேங்காயை ஒரு துணியை வைத்து பாலை மட்டும் வடிகட்டி பிழிந்து எடுத்துக் கொள்ளவும் .
  5. வடிகட்டி எடுத்து வைத்துள்ள தேங்காய் பாலை பச்சரிசி கலவையில் சிறிது சிறிதாக கலந்து முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துள்ள மாவை கொய்யா இலைகளின் பின்புறம் திருப்பி கொய்யா இலை வடிவத்திற்கு மாவை  தட்டிக்கொள்ளவும்.
  6. மாவிலிருந்து கொய்யா இலைகளை எடுத்தால் தனியாக பிரிந்து வரும் அதை அப்படியே உருளையாக உருட்டி இரண்டு நுனிகளையும் லேசாக அழுத்தி விட்டால் ஒட்டிக் கொள்ளும். இவ்வாறு அனைத்து மாவையும் செய்து எடுத்து ஒரு பத்து நிமிடம் அப்படியே வைக்க வேண்டும் அப்படி வைத்தால் மட்டும்தான் எண்ணெயில் போடும் பொழுது என்னை மேலே வெடிக்காமல் தெறிக்காமல் இருக்கும்.
  7. ஒரு வானெலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சூடானதும்  இப்படிஎடுத்து வைத்துள்ள சீப்பு முறுக்குகளை ஒன்றொன்றாக சூடான எண்ணெயில் போட்டு இரண்டு புறமும் திருப்பி விட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் ருசியான இனிப்பு சீடை முறுக்கு தயார்.