இதுவரை நீங்கள் செய்யாத குருமா ரெசிபி? சப்பாத்திக்கு தொட்டுக்க ருசியான தயிர் குருமா இப்படி செஞ்சி பாருங்க!

Summary: தயிர் குருமா ரொம்ப டேஸ்ட்டா குறைவான பொருட்களை வைத்து ரொம்ப ரொம்ப ருசியா எப்படி எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி தயிர் குருமா செய்ய போறோம். ஒரு மாதிரி குருமா செய்யாமல் அதிகமா மசாலாக்கள் அரைக்காமல் ரொம்ப ஈஸியா நம்ம ரொம்ப சீக்கிரத்துல இந்த குருமாவை செய்து முடித்து முடித்து விடலாம். நீங்க எல்லாரும் இதுவரைக்கும் செய்து கொண்டிருக்கிற குருமாக்கல் விட இப்படி குருமா செய்து உங்க குடும்பத்துல இருக்கிற எல்லாரையும் அசத்துங்க. .வாங்க இந்த தயிர் குருமா எப்படி செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.

Ingredients:

  • 2 கப் தயிர்
  • 3 உருளைக்கிழங்கு
  • 1 வெங்காயம்
  • 2 பச்சைமிளகாய்
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 ஸ்பூன் மிளகாய்தூள்
  • 1 ஸ்பூன் மல்லிதூள்
  • 1/2 ஸ்பூன் கரமசாலாதூள்
  • 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • கொத்தமல்லி
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • எண்ணெய்
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 பிரியாணி பிரியாணிஇலை
  • 1 சிட்டிகை பெருங்காயம்

Equipemnts:

  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் உருளைக்கிழங்குகளை தோல் சீவி கழுவி விட்டு சின்ன சின்ன சதுர துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.அடுப்பில் ஒரு கடாயை வைத்து தண்ணீர் ஊற்றி நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகளை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  2. உருளைக்கிழங்கு வெந்த பிறகு நீரில்லாமல் உருளைக்கிழங்கை வடித்து  எடுத்துவைத்துக் கொள்ள வேண்டும். பின் அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி அதில் மிளகாய் தூள் ,மஞ்சள் தூள் சேர்த்து  வதக்கவும்.
  3. பின்  உருளைக்கிழங்கை சேர்த்து மசாலா மீது முழுவதுமாக படுமாறு கலந்து விட்டு எடுத்து கொள்ளவும் ஒரு பாத்திரத்தில் தயிரை எடுத்து வைத்துக்கொண்டு அதில் மிளகாய் தூள் ,மல்லித்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக கலந்தெடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  4. அடுப்பில் ஒரு கடாயை வைத்து என்னை ஊற்றி காய்ந்த பிறகு அதில் சீரகம், பிரிஞ்சி இலை, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  5. பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்றாக பொன்னிறமாக வரும் வரை வதக்கிக் கொள்ளவும். பிறகு பச்சைமிளகாய் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும்.இஞ்சி பூண்டு பச்சை வாசனை சென்ற பிறகு அதில் கலக்கி வைத்துள்ள தயிரை ஊற்றி நன்றாக கொதிக்கவிடவும்.
  6. கொதித்து வந்த பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து வறுத்து எடுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கை குருமாவில் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
  7. உருளைக்கிழங்கு சேர்த்து குருமா நன்றாக கொதித்த பிறகு அதில் கொத்தமல்லி தழை தூவி இறக்கி சப்பாத்திக்கு சூடாக பரிமாறினால் சுவையான தயிர் குருமா தயார்.