தமிழரின் பாரம்பரிய கம்பு கூழ் செய்வது எப்படி ?

Summary: நம் உணவு பட்டியலில் இன்றைக்கு வரைக்கும் முக்கிய இடத்தில் கூழ் இருக்கிறது. ஆனால் நாம் நாவின் ருசிக்காக இன்று பல வகையான உணவுகளை சாப்பிட்டு நம்ம உடம்பை நஞ்சாக மாற்றி கொண்டு இறுக்கிறோம். அந்த விதத்தில் இன்று நாம் கம்ப கூழ் பற்றி தான் பார்க்க இருக்கிறோம் நாம் கம்ப கூழ் செய்து சாப்பிடும் போது நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி எந்த நோய்களும் நம் உடம்பில் அண்டாமல் பார்த்துக் கொள்ளும்.

Ingredients:

  • 1 டம்பளர் கம்பு
  • 5 டம்பளர் தண்ணீர்
  • உப்பு
  • 15 சின்ன வெங்காயம்
  • 1 கப் தயிர்

Equipemnts:

  • 1 கடாய்
  • 2 பெரிய பவுள்
  • 1 மிக்ஸி

Steps:

  1. முதலில் ஒரு டம்ளர் அளவு கம்பை எடுத்து கல், தூசி, மண் போன்றவற்றை நீக்கி சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு கம்பை ஒரு பவுளில் சேர்த்து அதனுடன் இரண்டு மூன்று முறை தண்ணீர் ஊற்றி நன்கு அலசி கொள்ளுங்கள். பின்பு நாம் அலசி சுத்தப்படுத்திய கம்பை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் இல்லாமல் திருதிருவன அரைத்துக் கொள்ளுங்கள்.
  2. பின் அரைத்த கம்பை ஒரு பவுலில் சேர்த்து அதனுடன் இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி 3 மணி நேரங்கள் நன்றாக ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதன்பின்பு ஊற வைத்த கம்பை தண்ணீரில்லாமல் வடிகட்டி தண்ணீரை தனியாக வைத்து கொள்ளுங்கள்.
  3. பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நம் வடிகட்டிய தண்ணீரையும் அதனுடன் நான்கு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் நன்கு கொதித்து வந்ததும் இதனுடன் கம்பையும் சேர்த்து 20 நிமிடங்கள் கம்பு கட்டியான பதத்திற்கு வரும் முறை கிளறிவிட்டு கம்பை வேக வைத்துக் கொள்ளுங்கள்.
  4. பின் கடாயை கீழ் இறக்கி வேக வைத்த கம்பை நன்றாக குளிர வைத்துக் கொள்ளுங்கள். கம்பு குளிர்ந்து கட்டியான பதத்திற்கு வந்தவுடன் இதை இப்போது எடுத்து கூலாக கரைக்க வேண்டும் என்றாலும் கரைத்துக் கொள்ளலாம் இல்லை ஒரு நாள் வைத்து அதன்பின் கரைத்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
  5. கட்டியாக மாறிய கம்புடன் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து விடுங்கள் மறுநாள் கம்ப கூழ் ஊற வைத்த தண்ணீரையும் வடிகட்டி விட்டு இதனுடன் ஒரு கப் அளவு தயிரை சேர்த்து கலந்து கொள்ளவும்.
  6. பின் தயிர் கலந்த கம்புடன் வடிகட்டிய நீரையும் ஊற்றி, உங்களுக்கு குடிப்பதற்கான தேவையான அளவு தண்ணீரும் சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள்.
  7. பின் இதனுடன் 15 சின்ன வெங்காயங்களை பொடியாக நறுக்கி அதையும் சேர்த்து கரைத்துக் கொள்ளுங்கள். பின் உப்பு சரிபார்த்து தேவையென்றால் சேர்த்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் சுவையான கம்மங்கூழ் தயாராகிவிட்டது.