ருசியான முட்டை சேமியா இப்படி செஞ்சி பாருங்க! வெறும் 10 நிமிஷத்துல இரவு டிபன் ரெடி!

Summary: உப்புமா இந்தியா முழுவதும் செய்யப்படும் ஒரு பிரபலமான உணவு. உப்புமாவில் பல வகை உண்டு. அதில் ரவா உப்புமா, கோதுமை ரவை உப்புமா, அவல் உப்புமா, அரிசி உப்புமா, மற்றும் சேமியா உப்புமா குறிப்பிடத்தக்கவை. அதில் நாம் இங்கு காண இருப்பது முட்டை சேமியா உப்புமா. இதை பெரும்பாலும் காலை நேர டிஃபனாகவோ அல்லது மாலை நேர டிஃபனாகவோ தான் பலரும் சுவைக்கிறார்கள். இவை பெரும்பாலும் சாம்பார் மற்றும் தேங்காய் சட்னியுடன் தான் உண்ணப்படுகிறது. பலருக்கும் உப்புமா பிடிக்காததற்கு முக்கிய காரணம் அதன் சுவையே. எனவே அனைவருக்கும் பிடிக்கும் விதத்தில் உப்புமாவை கொஞ்சம் வித்தியாசமான சுவையில் சமைக்கலாம். உப்புமாவை பிடிக்காது என்று கூறியவர்கள் கூட நிச்சயமாக அடிக்கடி செய்து தருமாறு விரும்பி சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 1 சேமியா
  • 3 பெரிய வெங்காயம்
  • 2 பச்சைமிளகாய்
  • 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 3 முட்டை
  • 1 தக்காளி
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/4 கப் கறிவேப்பிலை, கொத்தமல்லி
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 கரண்டி

Steps:

  1. முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  2. கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிதளவு எண்ணெய் விட்டு சேமியாவை பொன்னிறத்தில் நன்றாக வறுத்துக் கொள்ளவும்.
  3. அதன்பிறகு மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து முட்டையை நன்றாக அடித்து ஊற்றி தனியாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  4. அதே கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  5. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை சேர்த்து கலந்து இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
  6. மசாலா வாசனை போனவுடன் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும் வறுத்து வைத்துள்ள சேமியாவை அதில் சேர்த்து வேக விடவும்.
  7. சேமியா வெந்ததும், வறுத்து வைத்திருக்கும் முட்டையை அதில் சேர்த்து நன்றாகக் கிளறி மல்லித்தழை நறுக்கியது தூவி அடுப்பில் இருந்து இறக்கவும்.
  8. அவ்வளவுதான் சுவையான முட்டை சேமியா தயார்.