வாழைப்பூவை வைத்து ஒரு குருமா சில நிமிடத்தில் செய்வது விடலாம்! இந்த குருமா வாழைப்பூவுக்கு புதுசு!

Summary: ஆரோக்கியம் சம்பந்தமான எந்த ஒரு உணவினை சமைத்துகொடுத்தாலும் வீட்டில் உள்ளவர்கள் அதனை விரும்பி சாப்பிடுவது என்பது அரிதான ஒன்றாகும்.எனினும் ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை வாரத்திற்கு 2 முறையாவது உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். அவ்வாறு ஆரோக்கியத்தை அளிக்க கூடிய வாழைப்பூ வைத்து செய்யக்கூடிய ஒரு புதுவித வாழைப்பூ குருமா உணவினை பற்றியே இப்பதிவின்மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Ingredients:

  • 1/4 கிலோ வாழைப்பூ
  • 10 சின்ன வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 அன்னாசி பூ.
  • 1 பட்டை,கிராம்பு
  • 1 பிரியாணி இ
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • கொத்தமல்லி
  • 4 காய்ந்தமிளகாய்
  • தேங்காய்துருவல்
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1/2 டீஸ்பூன் கசகசா
  • 5 பல் பூண்டு
  • 1 சிறுதுண்டு இஞ்சி

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. வாழைப் பூவை பிரித்து இதழ்களின் நடிவில் உள்ள நரம்பை நீக்கி, இரண்டிரண்டாக நறுக்கி, மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும்
  2. அரைக்க கொடுத்துள்ளவற்றில் வரமிளகாய், சோம்பு, சீரகம், கசாகசா ஆகியவற்றை பத்து நிமிடம் கால் டம்ளர் தண்ணீரில் ஊரவைத்து தேங்காய் துருவல், இஞ்சி, பூண்டு சேர்த்து விழுதாக அரைக்கவும்
  3. வெங்காயம், தக்காளியை சிறிது பெரியதாக நறுக்கவும் அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி, தாளிக்க வைத்துள்ளவற்றை போட்டு தாளிக்கவும். வெங்காயம், தக்காளி, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும்
  4. எண்ணை பிரிந்ததும் வாழைப் பூவை போட்டு ஐந்து நிமிடம் வதக்கி அரைத்த மசாலாவை இரண்டு டம்ளர் தண்ணீரில் கலக்கி ஊற்றி பத்து நிமிடம் கொதிக்கவிடவும். வாழைப்பூ குருமா ரெடி இறக்கி வைத்து கொத்தமல்லித் தழையைத் தூவி பரிமாறவும்