இப்படியும் கூட ரசம் சாதம் செய்யலாம் ? இரவு உணவுக்கு இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

Summary: 5 மிளகு இருந்தால் எதிரி வீட்டில் கூட விருந்துஉண்ணலாம் என்பது பழமொழி. இவ்வாறு மிளகிற்க்கு அவ்வளவு அற்புதமான சக்தி இருக்கிறது.விஷத்தை முறிக்கும் திறன் பெற்றது இந்த மிளகு. குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும்சளி பிடித்தாலும் மிளகு ரசம் வைத்து கொடுத்தால் போதும். சளி இருந்த இடம் தெரியாமல்போய் விடும். உடல் சோர்வாக இருந்தாலும் அல்லது காய்ச்சலாக இருந்தாலும், சளிப் பிடித்திருந்தாலும்மிளகு சேர்த்து ரசம் வைத்து சாதம் கொடுப்பது தான் அனைவரது வீட்டிலும் வழக்கம். அப்படிகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடும் இந்த ரசம் சாதத்தை கலவை உணவாகவும்செய்திட முடியும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம்தெரிந்து கொள்வோம்.

Ingredients:

  • 1 புளி
  • 1 கப் சாதம்
  • 1 கைப்பிடி துவரம் பருப்பு
  • 2 தக்காளி
  • 1 தேக்கரண்டி மிளகுதூள்
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • பெருங்காயத்தூள்
  • உப்பு
  • 3 தேக்கரண்டி எண்ணெய்
  • 1 பூண்டு
  • 1/4 தேக்கரண்டி வெந்தயம்
  • 2 கொத்து கறிவேப்பிலை
  • 1//2 தேக்கரண்டி சீரகம்
  • 1 தேக்கரண்டி கடலைபருப்பு
  • 8 சின்ன வெங்காயம்
  • 4 பல் பூண்டு
  • 1 கொத்து கொத்தமல்லி
  • 2 பச்சைமிளகாய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. பருப்பை வேக வைத்துக் கொள்ளவும். வெறும் வானலியில் வறுக்க கொடுத்துள்ள பொருட்களை மொத்தமாக கொட்டி சிறுதீயில் மொறுமொறுப்பாகும் வரை வறுக்கவும்.
  2. பின்னர் ஆற வைத்து பொடித்துக் கொள்ளவும்.விழுதுக்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் ஒரு சற்றுக்கு மட்டும் விட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும், இல்லையேல் அம்மியில் தட்டிக் கொள்ளலாம்.
  3. சட்டியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இடிந்த விழுதை சேர்த்து வதக்கவும்.பின்னர் வறுத்து பொடித்த தூளை சேர்க்கவும்.அதன் பின் தக்காளியை பிசைந்து விடவும்.
  4. பின்னர்மற்ற தூள் வகைகளை சேர்த்து கிளறவும்.அதன் பிறகு கரைத்து வைத்துள்ள புளிக்கரைசல்.உப்பு மற்றும் வேக வைத்த பருப்பு சேர்த்து கொதிக்க விடவும்,
  5. அதன் பின் சாதத்தை கொட்டி ஒரு முறை கொதிக்க விட்டு இறக்கவும்.