காரசாரமான குடைமிளகாய் பொரியல்  இப்படி செய்து பாருங்கள்! சுடு சோறுடன் சாப்பிட ருசியாக இருக்கும்!

Summary: குழந்தைகள் விருப்பமாக சாப்பிடக்கூடிய குடைமிளகாயில், பொரியல் செறிந்து கொடுத்து பாருங்கள்,அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள்., . குடமிளகாயில்கொழுப்புச் சத்து, கொலஸ்ட்ரால், சோடியம் ஆகியன குறைவாகவே இருப்பதால் உடல் எடையைக் குறைக்கஉதவும். குடைமிளகாய் வயது முதிர்வை தடுக்கும் தன்மை உடையது. புற ஊதாக்கதிர்களால் தோலில்ஏற்படும் கருமை, சுருக்கம், வறட்சியை போக்கி தோலுக்கு ஆரோக்கியம் தருகிறது. மூட்டுவலிக்கு மருந்தாகிறது. குடைமிளகாய் வைத்து இந்த பொரியல் எப்படி செய்ய வேண்டும் என்பதைதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதனையும் ஒரு முறை செய்து பாருங்கள்.அவ்வளவு அசத்தலான சுவையில் இருக்கும்.

Ingredients:

  • 2 குடைமிளகாய்
  • 1 தக்காளி
  • 1 பெரிய வெங்காயம்
  • 1/2 டீஸ்பூன் குழம்பு மிளகாய்தூள்
  • 1/4 டீஸ்பூன் சீரகப்பொடி
  • 1/4 டீஸ்பூன் பெருங்காயத் தூள்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/4 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • கறிவேப்பிலை
  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் குடைமிளகாயை எடுத்து நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பின்பு வெங்காயம், தக்காளியையும் நறுக்கிக்கொள்ளவும்.
  2. அதன் பின்பு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு,பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்.
  3. பிறகு அதனுடன் வெங்காயம், உப்பு, தக்காளியை சேர்த்துநன்கு மென்மையாகும் வரை வதக்கவும்.
  4. மேலும் வதங்கிய தக்காளியுடன்,நறுக்கிய குடைமிளகாய்,குழம்பு மிளகாய் தூள், சீரகப் பொடி சேர்த்ததும் சிறிது நீர் தெளித்து, மூடி வைத்துசில நிமிடங்கள் வேக வைத்து இறக்கி பரிமாறவும்.
  5. ருசியான குடைமிளகாய் பொரியல் தயார்.