காடை கிரேவியை ஒரு முறை இப்படி கறி குழம்பு சுவையில் செஞ்சு பாருங்க! குழம்பு கொதிக்கும் போதே பசியை தூண்டும்!

Summary: பெரும்பாலும் வார இறுதி நாட்களில் அசைவ உணவை தான் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவார்கள். அவ்வாறுஅசைவ உணவை விரும்பி சாப்பிடுபவர்களுக்கு இந்த காடை கிரேவி ஒரு முறையேனும் சமைத்து,ருசி பார்த்துவிடுங்கள்.  காடை இறைச்சியை அதிக மக்களுக்கு சுவையாக சமைக்க தெரியாதஒரு உணவாக இன்றளவும் உள்ளதுசுலாமாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும்பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான காடை கிரேவியை  செய்து சாப்பிட்டு பாருங்கள்.

Ingredients:

  • 2 காடை
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் மிளகுத்தூள்
  • 1 டீஸ்பூன் மல்லித்தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1/2 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா
  • உப்பு
  • 1 கைப்பிடி கறிவேப்பிலை
  • 10 சின்ன வெங்காயம்
  • 1 பச்சை மிளகாய்
  • 1 கைப்பிடி கொத்தமல்லி தழை
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • எண்ணெய்
  • 1 பட்டை
  • 1 கிராம்பு
  • 1 பிரிஞ்சி இலை
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தாளிக்கவும்.
  2. தேங்காய்த் துருவல் மற்றும் சோம்பினை சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.
  3. பின் இதனுடன் வெங்காயம், சேர்த்து பொன்னிறமானதும், தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  4. பின் இதனுடன் தூள் வகைகள், காடை துண்டுகள், அரைத்த தேங்காய் விழுதுகள், உப்பு சேர்த்து வதக்கவும். தேவையான அளவு நீர் விட்டு, மூடி வேக விடவும்,
  5. குக்கர் என்றால் 2 விசில் போதுமானது.பாத்திரம் என்றால் 10 நிமிடங்களுக்கு ஒரு முறை சரி பார்க்கவும்.
  6. வெந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும், சுவையான காடை கிரேவி ரெடி.