கல்யாண வீட்டு உருளைகிழங்கு மிளகு வறுவல் செய்து வீட்டில் உள்ள அனைவரையும் அசத்துங்கள்!!!

Summary: கல்யாணவீட்டு மிளகு உருளைக்கிழங்கு வறுவல் என்றால் எல்லாருக்கும் பிடிக்கும் கல்யாண வீட்டில் செய்யும் சைடிஷ் உணவுகளுக்கு நிறைய ரசிகர்கள் உண்டு. அப்படி கல்யாண வீடுகளில் செய்வது போன்ற உருளைக்கிழங்கு மிளகு வறுவல் எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ள இருக்கின்றோம். உணவு பதார்த்தங்களில் அனைவருக்கும் மிகவும் பிடித்த வறுவல் என்று கூறினால் அது உருளைக்கிழங்கு வறுவல் தான். ருசியான கல்யாண வீட்டு விருந்துகளில் கிடைக்க கூடிய சுவையில் உருளைக்கிழங்கு மிளகு வறுவல் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

Ingredients:

  • 3 உருளைகிழங்கு
  • 2 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 ஸ்பூன் மிளகு
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 2 ஸ்பூன் மல்லிதூள்
  • 1/2 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/2 ஸ்பூன் பெருங்காயதூள்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • கொத்தமல்லி
  • உப்பு
  • எண்ணெய்
  • 1 துண்டு பட்டை
  • 1 ஸ்பூன் கடுகு

Equipemnts:

  • 1 தோசை கல்

Steps:

  1. முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றாமல் மிளகு, கறிவேப்பிலை போட்டு இரண்டு நிமிடம் வதக்கிக் கொள்ளவும்.
  2. பிறகு சீரகம், சோம்பு சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.வறுத்து எடுத்து வைத்துள்ள மசாலா பொருட்கள் ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  3. பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்தும் பட்டை ,கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
  4. பிறகு பொடியாக  நீளவாக்கில் அறிந்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
  5. பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளிப் பழத்தை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  6. தக்காளிப்பழம் நன்றாக வதங்கிய பிறகு அதில் உப்பு சேர்த்து கிளறிவிட்டு பெருங்காயத்தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். இஞ்சி பூண்டு விழுதின் பச்சை வாசனை சென்ற பிறகு மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக ஒரு கிளறு கிளறி விடவும்.
  7. பிறகு அரைத்து பொடித்து வைத்துள்ள மசாலா பொடியில் இருந்து பாதியை மட்டும் கடாயில் சேர்த்து நன்றாக வெங்காயம் தக்காளி உடன் கலக்குமாறு கிளறி விடவும்.
  8. பிறகு வேகவைத்து எடுத்துள்ள உருளைக்கிழங்குகளை பொடியாக நறுக்கி இந்த மசாலாக்களுடன் சேர்த்து நன்றாக ஒரு கிளறு கிளறி விடவும் .
  9. பின் மீதம் வைத்துள்ள மசாலா பொடியை சேர்த்து நன்றாக கலந்து விடவும். உருளைக்கிழங்கும் மசாலாக்களும் ஒன்றோடு ஒன்று கலந்து நன்றாக வெந்து சூழ வந்த பிறகு அதில் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறினால் சுவையான கல்யாண வீட்டு உருளைக்கிழங்கு மிளகு வறுவல் தயார்.