காலை டிபனுக்கு சூப்பரான சுவையில் வாழைப்பழ இடியாப்பம் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

Summary: வாழைப்பழ இடியாப்பம் ஆரோக்கியமான உணவுகள் அப்படிங்கிற பட்டியல்ல வந்துரும். அப்படி வேக வைத்த உணவுகள்ல உலகத்திலேயே முதல் இடம் பிடித்தது இட்லி. அதுக்கு அப்புறமா இடியாப்பம் ஆவியில் வேக வைப்பதால ரொம்பவே ஆரோக்கியமான ஒரு உணவா இருக்கு. இந்த வாழைப்பழ இடியாப்பம் ரொம்பவே சுவையாகவும் எல்லாருக்கும் பிடித்த மனதாகவும் இருக்கும். வாழைப்பழம் அப்படிங்கறது ரொம்பவே புடிச்ச ஒரு பழம். வாழைப்பழத்தையும் இடியாப்பத்தையும் எப்படி மிக்ஸ் பண்ணி வாழைப்பழ இடியாப்பம் செய்யலாம் எப்படின்னு இப்போ தெரிஞ்சுக்க போறோம். இந்த வாழைப்பழ இடியாப்பத்தை ரொம்பவே சுலபமாக சீக்கிரமாகவும் செய்யலாம்.

Ingredients:

  • 5 நேந்திரம் வாழைப்பழம்
  • 1 கப் அரிசி மாவு
  • 1 கப் தேங்காய் துருவல்
  • 1 சிட்டிகை ஏலக்காய் தூள்
  • உப்பு
  • கப் நாட்டுசக்கரை

Equipemnts:

  • 1 இட்லி பாத்திரம்
  • 1 பெரிய பாத்திரம்

Steps:

  1. முதலில் நேந்திரம் வாழைப்பழத்தை இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  2. வாழைப்பழம் வெந்த பிறகு தோலை உரித்து விட்டு வெறும் பழத்தை மட்டும் மசித்து எடுத்துக் கொள்ளவும். மசித்து எடுத்து வைத்துள்ள வாழைப்பழத்தில் அரிசி மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  3. இடியாப்ப மாவு பதத்திற்கு வருவதற்காக சிறிதளவு தண்ணீர் சிறிதளவு எண்ணெய் சேர்த்து மாவை நன்றாக பிசைந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  4. மாவை பிசைந்த பிறகு இட்லி பாத்திரத்தில் வேக வைப்பதற்கு தயார் செய்து வைத்து விட்டு இடியாப்ப உரலில் பிசைந்து வைத்துள்ள மாவை சேர்த்து இடியாப்பங்களாக பிழியவும்.
  5. அது இடியாப்பத்தின் மேல் துருவிய தேங்காய் பூவை தூவி இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைக்கவும். வாழைப்பழ இடியாப்பங்கள் வெந்த பிறகு அவற்றை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி விடவும்.
  6. மாற்றிய இடியாப்பத்திற்கு நாட்டுச்சர்க்கரையை சைடிஸ்சாக வைத்து பரிமாறினால் சுவையான வாழைப்பழ இடியாப்பம் தயார்.