மணமணக்கும் சுவையான வாழைப்பழ புட்டு செய்வது எப்படி ?

Summary: நாம் இன்றைக்கு புட்டுகளில் மிகவும் சுவையான வாழைப்பழம் புட்டு பற்றி தான் பார்க்க இருக்கிறோம். பொதுவாக புட்டு தயார் செய்து அதனுடன் வாழைப்பழத்தை பிசைந்து சாப்பிடும் பொழுது அதன் சுவை அற்புதமாக இருக்கும். ஆனால் இன்று வாழைப்பழத்தை புட்டு சமைத்து சாப்பிடும் பொழுது அதன் சுவை எப்படி இருக்கும். இது போன்று இந்த வாழைப்பழ புட்டை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் நீங்கள் கொடுத்ததை விட இன்னும் வேண்டும் என மிகவும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும்.

Ingredients:

  • 4 வாழைப்பழம்
  • ½ கப் சர்க்கரை
  • ½ கப் வெல்லம்
  • 1 ½ கப் துருவிய தேங்காய்
  • 2 கப் புட்டு மாவு
  • உப்பு
  • சுடு தண்ணீர்

Equipemnts:

  • 1 இட்லி பாத்திரம்
  • 1 பெரிய பவுள்
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் நாம் வைத்திருக்கும் வாழைப்பழங்களை தோலுரித்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். பின் நறுக்கிய வாழைப்பழ துண்டுகளை ஒரு பவுளில் சேர்த்து அதனுடன் அரை கப் சர்க்கரை, அரை கப் வெல்லம் மற்றும் ஒன்றறை கப் துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
  2. பின் மற்றொரு பெரிய பவுளில் இரண்டு கப் அளவிற்கு புட்டு மாவு சேர்த்து அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின் சூடான நீரை சிறிது சிறிதாக சேர்த்து புட்டு மாவை திருதிருவன பிசைந்து கொள்ளுங்கள். புட்டு மாவை கையில் பிடித்தால் மாவு உதிராமல் இருக்க வேண்டும், இந்த பதத்திற்கு புட்டு மாவு பிசைந்து கொள்ளுங்கள்.
  3. அதன் பின்பு ஒரு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள் தண்ணீர் கொதித்து வந்ததும் இட்லி பாத்திரத்தின் அடித்தட்டை வைத்து இரண்டு கிண்ணங்களை எடுத்து அதில் எண்ணெயை தடவி கொள்ளவும்.
  4. பின் அதன் அடிப்பகுதியில் சிறிதளவு வாழைப்பழத்தை நிரப்பி, அதன் மேல் சிறிது புட்டை சேர்த்து, அதற்கு மேல் மறுபடியும் வாழைப்பழத்தை பரப்பி இவ்வாறாக இரண்டு கின்னத்திலும் நிரப்பி இட்லி பாத்திரத்தில் வைத்து 15 நிமிடங்கள் அவித்துக் கொள்ளுங்கள்.
  5. இப்படியாக மீதம் இருக்கும் புட்டு மாவையும் கின்னத்தில் நிரப்பி இட்லி பாத்திரத்தில் வைத்து அவித்து கொள்ளுங்கள் அவ்வளவுதான் சுவையான வாழைப்பழம் புட்டு இனிதே தயாராகி விட்டது.