வாய்க்கு ருசியாக ஆரஞ்சு பழ ரசம் இப்படி செய்து பாருங்க! சுட சுட சாதத்துடன் போட்டு சாப்பிட அபாரமாக இருக்கும்!

Summary: ரசம் என்பது தென்னிந்திய மக்களின் உணவு வகைகளில் மிகவும் முக்கியமான ரெசிபி ஆகும். இதை எல்லா தருணங்களிலும் பொதுவாக எல்லா வீடுகளிலும் இதைச் செய்து மகிழ்வர். ரசம் என்பது காரமான சுவையுடன் நாக்கை சொட்டை போடச் செய்யும் புளிப்பு சுவையுடன் இருக்கும். ஆரஞ்சு பழத்தில் கால்சியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் அதிகம் உள்ளது. இது சிறுநீரக கற்கள், சிறுநீரக தொற்று நோய்கள் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது. ஆரஞ்சு பழ சீசன் தொடங்கி விட்டது. ஆரஞ்சு பழத்தில் எண்ணற்ற நன்மைகள் இருக்கிறது. தினம் ஒரு பழம் சாப்பிடுவது உடலுக்கு நன்மை தரும். பழமாக சாப்பிடுவது பிடிக்க வில்லை என்றால் இது போன்ற ஆரஞ்சு ரசம் முயற்சி செய்து சாப்பிட்டு பாருங்கள். இந்த ஆரஞ்சு ரசத்தை குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு உடல் நலம் சரியில்லாத போது செய்து கொடுத்தால் நல்லது.

Ingredients:

  • 1 ஆரஞ்சு
  • 1/2 எலுமிச்சை பழம்
  • 1 தக்காளி
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 5 பல் பூண்டு
  • 1 டீஸ்பூன் மல்லி
  • 1 பச்சை மிளகாய்
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • கொத்தமல்லி

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 மிக்ஸி

Steps:

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் தக்காளி பழம் மற்றும் கொத்தமல்லி இலைகள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.
  2. ஆரஞ்சு பழம் மற்றும் எலுமிச்சை சாறை பிழிந்து அதன்‌‌ சாறை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  3. பின் ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு, சீரகம், பூண்டு, பச்சை மிளகாய், கருவேப்பிலை, தனியா, பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  4. ஒரு‌ கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  5. அதன்பிறகு கரைத்து வைத்த தக்காளி கலவையை அதில் ஊற்றி நன்றாக நுரை வரும் வரை மிதமான தீயில் வைக்கவும்.
  6. அடுப்பை அணைத்து ரசத்தை கீழே இறக்கி வைத்து நன்றாக ஆறியவுடன் ஆரஞ்சு பழச்சாறு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாகக் கலந்து விடவும்.
  7. அவ்வளவுதான் சுவையான மற்றும் சத்து நிறைந்த ஆரஞ்சு ரசம் தயார்.