கிராமத்து ஸ்டைல் அருமையான மொச்சை முருங்கை புளிக்குழம்பு ஒரு முறை இப்படி செய்து சுவைத்து பாருங்கள்!

Summary: இன்றைக்கு நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.சுடச்சுட சாதத்தில் இந்தக் குழம்பை போட்டு பிசைந்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையாகஇருக்கும். தொட்டுக்கொள்ள ஒரு வத்தல் இருந்தால் போதும். பச்சை மொச்சை அல்லது காய்ந்தமொச்சை எதில் வேண்டுமென்றாலும் சேர்த்து கொள்ளலாம். அவ்வாறு கிராமத்து உணவுகளுக்கு என்று தனிப்பட்டசுவை இருக்கிறது. ஒருமுறை அந்த சுவையை ருசித்து விட்டால் என்றென்றும் அது நமது நாவைவிட்டு மறையாது. அவ்வாறு அவர்கள் செய்யும் பக்குவமே தனி விதமாகத்தான் இருக்கும். அவர்கள்கை மனமும், அவர்கள் செய்யும் விதமும் ஒரு தனிப்பட்ட சுவையை அந்த உணவிற்கு கொடுத்துவிடும்.இவ்வாறு இந்த மொச்சை முருங்கை புளிக்குழம்பு எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி தான்இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Ingredients:

  • காய்ந்த மொச்சைக்கொட்டை
  • முருங்கைக்காய்
  • சின்ன வெங்காயம்
  • பொடியாக அரிந்த வெங்காயம்
  • பொடியாக அரிந்த தக்காளி
  • புளி
  • கலந்த மிளகாய்த் தூள்
  • மஞ்சள் தூள்
  • வெந்தயப் பொடி
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லித் தழை
  • நல்லெண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. மொச்சைக் கொட்டையை முந்தைய நாள் இரவே தண்ணீர் ஊற்றி ஊற வைத்துவிடவும், முருங்கைக்காயைத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும், சின்ன வெங்காயத்தின் தோலை உரித்து வைக்கவும். மற்ற தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
  2. ஊறிய மொச்சைக்கொட்டையைக் குக்கரில் போட்டு 4 விசில் வரும் வரை வேக வைத்து, ஆறியதும் தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும்.
  3. புளியில் தண்ணீர் ஊற்றி ஊற வைத்து, பிறகுகரைத்து வடிகட்டி வைக்கவும்,
  4. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கி, சின்ன வெங்காயம் மற்றும் பொடியாக அரிந்த வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. பிறகு கறிவேப்பிலை, தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு குழையும் வரை வதக்கவும், வதங்கியதும் வெந்தயப் பொடி சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வதக்கிய பிறகு புளிக் கரைசலை ஊற்றவும்.
  6. அத்துடன் முருங்கைக்காய், கலந்த மிளகாய்த் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும்.
  7. முருங்கைக்காய் வெந்ததும் மொச்சைக்கொட்டையைச் சேர்த்து கொதிக்கவிடவும்.
  8. நன்றாகக் கொதித்ததும் 2 நேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி இறக்கி கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்,