மட்டன் நுரையீரல் பொரியல் இப்படி ஒரு முறை வீட்டில் இப்படி சமைத்து பாருங்க! இதன் சுவைக்கு ஒரு பிடி சாதமும் மிஞ்சாது!

Summary: பொதுவாகவே அசைவ உணவு என்றால் மிகவும் எளிமையாககிடைப்பது கோழிக்கறி தான். ஆனால் கோழிக்கறியை விட சற்று விலை அதிகமாக இருந்தாலும் ஆட்டுக்கறியைஉணவில் சேர்த்துக் கொள்வது என்பது உடலுக்கு நன்மையை அளிக்கிறது. அதிலும் ஆட்டின் நுரையீரலைசமைத்து சாப்பிடும்பொழுது நமது உடலில் உள்ள நுரையீரல் பிரச்சனைகளையும் சரி செய்கின்றது.இவ்வாறு உடல் நலத்திற்கு நன்மை அளிக்கக்கூடிய ஆட்டு நுரையீரல் பொரியல் எப்படி சுவையாகசமைப்பது என்பதனை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Ingredients:

  • 1 நுரையீரல்
  • 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 2 டீஸ்பூன் மிளகாய்தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலாத்தூள்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. நுரையீரலை நல்ல வெள்ளையாக வரும் வரை சுத்தம் செய்யவும். பின் சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்,
  2. கடாயில் நுரையீரலை போட்டு கரம் மசாலாத்தூள், உப்பு போட்டு 2 குவளை தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிடவும்.
  3. பின் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை,வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு தாளித்துஇஞ்சி பூண்டு விழுதை போட்டு பொரிய விட்டு மிளகாய்தூள், மஞ்சள்தூள் போட்டு கிளறவும்
  4. வேக வைத்த நுரையீரலை போட்டு நன்கு கிளறி சிறிது தண்ணீர் ஊற்றி சேர்ந்தால் போல் வந்ததும் அடுப்பைஅணைக்கவும்.
  5. சுவையான நுரையீரல் பொரியல் ரெடி.