அம்மா செய்யும் அசத்தலான அரைச்சு விட்ட பூண்டு சுண்டல் குழம்பு இப்படி செஞ்சி பாருங்க!

Summary: கருப்பு கொண்டைகடலையை முளைகட்டி வைத்து சாப்பிடும்பொழுது அதில் இருக்கிற சத்துக்கள் இன்னும் அதிகமாகவே கிடைக்கிறது. இப்போ இந்த சுண்டலில் அரைச்சு விட்ட குழம்பு வச்சு அசத்தலாம். அம்மா செய்ற மாதிரியான சுண்டல் குழம்பு நம்ம இப்போ செய்ய போறோம்.இந்த பூண்டு சுண்டல் குழம்பு மிகவும் ருசியானதாகும் அருமையான திருப்தியையும் கொடுக்கும். இப்ப நாம இந்த குழம்பை அரைச்சு விட்டு எப்படி சுவையா பூண்டு சுண்டல் குழம்பு வைக்கிறது அப்படிங்கறது தெரிஞ்சுக்கலாம் வாங்க.

Ingredients:

  • 2 கப் கருப்பு கொண்டைகடலை
  • 1/2 கப் சின்னவெங்காயம்
  • 1/2 கப் பூண்டு
  • 4 தக்காளி
  • 1 புளி
  • 2 ஸ்பூன் குழம்பு மிளகாய்தூள்
  • 1 கப் தேங்காய் துருவல்
  • உப்பு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • எண்ணெய்
  • 1/2 கப் சின்ன வெங்காயம்
  • 1/2 கப் பூண்டு
  • 1 ஸ்பூன் கடுகு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. கொண்டைக்கடலையை நன்றாக கல்லில் இல்லாமல் பார்த்து சுத்தம் செய்துவிட்டு ஒரு இரண்டு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சின்ன வெங்காயம், பூண்டு இவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  2. வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு அதில் தக்காளிப் பழம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். இவைகள் உடன் புளி, மிளகாய்தூள்,தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.வதக்கி வைத்துள்ள  பொருட்களைஎடுத்து ஆற வைத்துக் கொள்ளவும்.
  3. வதக்கி வைத்துள்ள பொருட்கள் ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் அவற்றை சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்துக் கொள்ளவும். அதில் குழம்பிற்கு தேவையான தண்ணீர் விட்டு நன்றாக கிளறி விடவும்.
  4. பின் ஊற வைத்துள்ள கொண்டக்கடலை தேவையான அளவு  உப்பு சேர்த்து மூடி போட்டு கொதிக்க வைக்கவும். குழம்பு நன்றாக கொதித்து பச்சை வாசனை சென்ற பிறகு கொண்டக்கடலை வெந்து விட்டதா என்று பார்க்கவும்.
  5. கொண்டக்கடலை வெந்த பிறகு வேறொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, சின்ன வெங்காயம், பூண்டு , கறிவேப்பிலை சேர்த்து நன்றாக தாளித்து எடுத்துக் கொள்ளவும்.
  6. இந்த தாளிப்புகளை குழம்பில் கலந்து விட்டால் சுவையான ருசியான அம்மா செய்வது போன்ற அரைத்தவிட்ட பூண்டு சுண்டல் குழம்பு தயார்.