முளைப்பயறு சப்பாத்தி இப்படி செய்து உங்கள் விட்டில் உள்ளவர்களை அசத்துங்கள்!

Summary: பச்சைபயிறு கொண்டு செய்யப்படும் இந்த சப்பாத்தி அனைவரும் விரும்பி ரசித்து, ருசித்து சாப்பிடும்படியாக இருக்கும். நீங்களும் பச்சைபயிறு  இருந்தால்முத்தின நாளே முளை விட்டு இதை செஞ்சு பாருங்க, எல்லோரும் உங்களை நிச்சயமாக பாராட்டுவாங்க!முளைப்பயறு சப்பாத்தி. அடிக்கடி சப்பாத்தி செய்பவர்களுக்கு முளைப்பயறு வைத்து ஸ்டஃப்ட் முளைப்பயறு சப்பாத்தியை ரொம்ப ருசியானஒரு டிஷ்ஷாக மாற்றக்கூடிய அற்புதமான குறிப்பு தான், இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம்.அருமையான டேஸ்டியான முளைப்பயறு சப்பாத்தி,எப்படி எளிதாக செய்வது? என்பதை இனி தெரிந்துகொள்ளப் போகிறோம்.

Ingredients:

  • 2 கப் கோதுமை மாவு
  • 1/2 டீஸ்பூன் உப்பு
  • 1 டேபிள்ஸ்பூன் நெய்
  • எண்ணெய்
  • 2 டேபிள்ஸ்பூன் பனீர் துருவல்
  • 2 பச்சை மிளகாய்
  • பூண்டு
  • உப்பு
  • 2 டீஸ்பூன் எண்ணெய்

Equipemnts:

  • 1 தோசை கல்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் முளைப்பயறைஆவியில் வேக வைத்து எடுத்துக்கொள்ளுங்கள். ஆறிய பின் கரகரப்பாக அரைக்கவேண்டும்
  2. பின் பூண்டு,பச்சை மிளகாய் இரண்டையும் சேர்த்து விழுதாக அரைக்கவேண்டும்
  3. பின் எண்ணெயைக் காயவைத்து, சிறு தீயில் பூண்டு, மிளகாய்விழுதை பச்சை வாசனை போக வதக்குங்கள்
  4. பின் பச்சை வாசனை போன பிறகு, முளைப்பயறு அரைத்த விழுது,பனீர் துருவல், உப்பு சேர்த்து கிளறி இறக்குங்கள்.
  5. பின்பு கோதுமைமாவை வழக்கம்போல பிசைந்து, சப்பாத்திகளாக திரட்டி. நடுவே முளைப்பயறு பூரணத்தை வைத்து,மேலே இன்னொரு சப்பாத்தி வைத்து, ஓரங்களை ஒட்டி எண்ணெய் விட்டு வேக விடவேண்டும்
  6. பரிமாற்ற சுவையான முளைப்பயறு சப்பாத்தி தயார்.