நெருப்பில் சுட்ட சுவையான மங்காய் சட்னி செய்வது எப்படி ?

Summary: நான் சிறுவயதில் இருக்கும் பொழுதெல்லாம் எங்களது கிராமத்தில் என் பாட்டி இது போன்று சட்னி செய்து கொடுப்பார்கள். இன்று நாமும் அதே முறையில் நெருப்பில் சுட்ட மாங்காய் சட்னி செய்து பார்க்க போகிறோம். ஆம் இந்த நெருப்பில் சுட்ட மாங்காய் சட்னி உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். குறிப்பாக குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் இதை நீங்கள் இட்லி தோசை உடன் மட்டுமில்லாமல் சோறுடன் மதிய உணவுக்கு துவையலாக எடுத்தும் சாப்பிடலாம் அந்த அளவிற்கு அசத்தலான சுவையில் இருக்கும்.

Ingredients:

  • 4 மங்காய்
  • 4 பெரிய வெங்காயம்
  • 1 கப் தேங்காய் துண்டுகள்
  • 4 வர மிளகாய்
  • கல் உப்பு
  • 1 துண்டு இஞ்சி
  • 2 tbsp எண்ணெய்
  • 1 tbsp கடுகு உளுந்த பருப்பு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 2 வர மிளகாய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் அடுப்பை பத்த வைத்து நாம் வைத்திருக்கும் நான்கு மாங்காய்களை ஒன்றொன்றாக தீயில் காட்டி நான்கு மாங்காய்களையும் முழுவதுமாக சுட்டு எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு நான்கு பெரிய வெங்காயத்தையும் எடுத்து கொண்டு அதையும் முழுவதுமாக நெருப்பில் சுட்டு எடுத்துக் கொள்ளுங்கள்.
  2. பின்பு நெருப்பில் சுட்ட மாங்காயின் தோலை உரித்து விட்டு. பின் சதை பகுதியில் இருந்து கொட்டையை நீக்கி தனியாக எடுத்து கொள்ளுங்கள். பின்பு நெருப்பில் சுட்ட வெங்காயத்தையும் தோலுரித்து பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
  3. பின்பு மிக்ஸி ஜாரில் ஒரு கப் நறுக்கிய தேங்காய், நான்கு வர மிளகாய், ஒரு துண்டு இஞ்சி, தேவையான அளவு கல் உப்பு மற்றும் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளுங்கள்.
  4. பின் இதனுடன் நாம் நெருப்பில் சுட்ட மாங்காயை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளுங்கள். பின் கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.
  5. பின் எண்ணெய் காய்ந்ததும் ஒரு டீஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு, ஒரு கொத்து கருவேப்பிலை, இரண்டு வர மிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ளவும் தாளித்து முடித்தவுடன்.
  6. நாம் அரைத்த மாங்காய் சட்னியையும் கடாயில் சேர்த்து ஒரு ஒரு நிமிடம் அங்கு வதக்கி விட்டு எடுத்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் சுவையான நெருப்பில் சுட்ட மாங்காய் சட்னி இனிதே தயாராகி விட்டது.