பக்காவான ருசியில் பள்ளிபாளையம் சிக்கன் வறுவல் இனி இப்படி செஞ்சி பாருங்க!

Summary: நம்ம எத்தனையோ விதமா சிக்கன் உணவுகளை சமைத்திருப்போம். ஆனால் எந்த ஒரு மசாலாவும் சேர்க்காமல் ரொம்பவே குறைந்த பொருட்கள் வச்சு ரொம்ப சுவையான ஒரு பள்ளிப்பாளையம் சிக்கன் வறுவல் செய்ய போறோம். ரொம்ப ரொம்ப சுவையானது இதுக்காக தனியா எந்த ஒரு மசாலா பொருளும் தயார் செய்யணும் அப்படிங்கிற அவசியமே கிடையாது..

Ingredients:

  • 1/2 கிலோ சிக்கன்
  • 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 20 காய்ந்த மிளகாய்
  • 1 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1 வெங்காயம்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும்.பிறகு காய்ந்த மிளகாய்  இரண்டுமூன்றாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  2. பின் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை காய்ந்த மிளகாய் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  3. காய்ந்த மிளகாய் நன்றாக வதங்கிய பிறகு அதில் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு அதில்  இஞ்சி பூண்டு விழுத சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  4. பின் சுத்தம் செய்து எடுத்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.பிறகு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
  5. சிக்கனில் ஏற்கனவே நீர் இருப்பதால் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும் .அவ்வப்போது மூடியை திறந்து சிக்கனை நன்றாக கலந்து விட்டுக் கொண்டே இருக்கவும்.
  6. இந்த பள்ளிபாளையம் சிக்கன் காய்ந்த மிளகாய் உள்ள காரம் முழுவதும் இறங்கி சிக்கனின் சுவை நன்றாக வெந்த பிறகு கொத்தமல்லி தலைகளை தூவி இறக்கி விடவும்.
  7. அனைத்து வகையான சாதத்துடனும் இந்த பள்ளிப்பாளையச் சிக்கன் சாப்பிடுவதற்கு பக்காவான ருசியில் இருக்கும்.