மாலை நேரம் டீ, காபியுடன் சாப்பிட பாலக் கீரை நக்கட்ஸ் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

Summary: தற்போது இளையவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரின் மத்தியிலும் மிகவும் பிரபலமாக இருக்கும் பர்கர், பிட்ஸா பட்டியலில் நக்கட்ஸுக்கும் இடம் உண்டு. பொதுவாகவே நக்கட்ஸ்கலுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது மத்தியிலும் ஒரு நல்ல வரவேற்பு உண்டு. அந்த வகையில் இந்த பாலக் கீரை நக்கட்ஸ்சும் அனைவரது மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. நக்கட்ஸ் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. அதில் முட்டை நக்கட்ஸ், வெஜிடபிள் நக்கட்ஸ், மற்றும் உருளைக்கிழங்கு நக்கட்ஸ் மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது பாலக் கீரை நக்கட்ஸ். இதனை நம் குழந்தைகள் இதை மிகவும் விரும்பி உண்பார்கள்.

Ingredients:

  • 1 கப் பாலக்கீரை
  • 1/2 கப் வேர்க்கடலை
  • 1 நறுக்கிய பச்சைமிளகாய்
  • 3 டீஸ்பூன் சில்லி ஃப்ளேக்ஸ்
  • 1 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • தேவையான அளவு உப்பு
  • 1 கப் பிரெட் தூள்
  • 3 டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் வேர்க்கடலையை மூன்று மணி நேரம் ஊற வைத்து, மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  2. அரைத்த வேர்க்கடலை ஒரு பவுளுக்கு மாற்றி அதனுடன் நறுக்கிய பாலக் கீரை, பச்சைமிளகாய், சில்லி ஃப்ளேக்ஸ், மிளகுத்தூள், உப்பு, எலுமிச்சை சாறு, கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, பிரட் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  3. கலந்து வைத்துள்ள கலவையை விரும்பிய வடிவில் நக்கட்ஸ்களாக செய்து கொள்ளவும்.
  4. ஒரு‌ பாத்திரத்தில் கோதுமை மாவு, சிறிதளவு தண்ணீர், சில்லி ஃப்ளேக்ஸ், மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும்.
  5. நாம் செய்து வைத்துள்ள நக்கட்ஸ்களை கோதுமை மாவு கலவையில் போட்டு, பிரட் தூளில் பிரட்டி எடுத்துக் கொள்ளவும்.
  6. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் செய்து வைத்த நக்கட்ஸ்களை சேர்த்து இரு புறமும் சிவக்க பொரித்து எடுக்கவும்.
  7. பொரித்து எடுத்த நக்கட்ஸ்களை தக்காளி சாஸ் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.
  8. அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான பாலக் கீரை நக்கட்ஸ் தயார்.