ப்ரவுன்ரைஸ் பிஸிபேளாபாத் செய்வது இவ்வளவு சுலபமா? சில நிமிடத்தில் சுலபமாக பிரஷர் குக்கரில் செய்து விடலாமே!!!

Summary: காலையில குழந்தைகளுக்கும் கணவருக்கும் லஞ்ச் பாக்ஸுக்குசுவையாக, சிம்பிளாக அதே சமையல் ஆரோக்கியமானதாக என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போது,கை கொடுக்கும் ரெசிபி இந்த ப்ரவுன்ரைஸ் பிஸிபேளாபாத் . ரெசிபி சிம்பிளா செய்யலாம்.ஆரோக்கியம் தரக்கூடிய ரெசிபி,  குழந்தைகள் விரும்பிசாப்பிடக்கூடிய ரெசிபி. மனமனக்கும் ரெசிபி. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். பாரம்பரியமானமுறையில் இந்த ப்ரவுன்ரைஸ் பிஸிபேளாபாத் பக்குவமாக எப்படி செய்வது தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

Ingredients:

  • 1 கப் ப்ரவுன் ரைஸ்
  • 1/4 கப் துவரம் பருப்பு
  • 2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 2 பூண்டு
  • 1 துண்டு பரங்கிக்காய்
  • 4 கத்திரிக்காய்
  • 1 கப் பட்டாணி
  • 1 உருளை
  • 1 வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • புளி
  • உப்பு
  • 1 தேக்கரண்டி சாம்பார்பொடி
  • கொத்தமல்லி
  • உப்பு
  • 1 தேக்கரண்டி சாம்பார் பொடி
  • 1/2 தேக்கரண்டி கடுகு
  • 1/2 தேக்கரண்டி சீரகம்
  • 5 வெந்தயம்
  • கறிவேப்பிலை
  • 1 சிட்டிகை பெருங்காயம்
  • முந்திரி
  • வெண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. காய்கறிகளை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும், வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
  2. குக்கரில் பருப்பு, பூண்டு, மஞ்சள் தூள் சேர்த்து குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளாவும்.அதேகுக்கரில் நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளை தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
  3. காய்கள் நன்கு வெந்ததும் ப்ரவுன் ரைஸ், பருப்பு, உப்பு, தண்ணீர் சேர்த்து வேக விடவும். அதன்பின்னர் சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விடவும்.
  4. வாணலியில் வெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பில்லை, முந்திரிசேர்த்து தாளிக்கவும், தாளித்தவற்றை சாதத்துடன் சேர்த்து கிளறி விட்டு சூடாக பரிமாறவும்.
  5. மேலே கொத்தமல்லி தூவவும், சுவையான ப்ரவுன் ரைஸ் பிளிபேளாபாத் ரெடி.