பெய்கின்ற மழைக்கு இதமா சுட சுட நண்டு மிளகு சூப் இப்படி செஞ்சி பாருங்கள்!

Summary: நண்டு சளி இருமலை கட்டு படுத்தும். குளிர்ச்சியான நேரத்தில், சளி இருமல் இருந்தால் சூடாக ஏதாவதுசாப்பிட வேண்டும் என்று தோன்றும். தொண்டைக்கும் சூடாக சாப்பிட்டால் இதமாக இருக்கும்.அப்படி இருக்க, நண்டு சேர்த்து அசைவ சூப் என்றல் கிடக்கவா வேண்டும் அனைவரும் மிகவும்விரும்பி சாப்பிட்டிட்டு, உங்களை பாராட்டுவார்கள். நண்டிற்கு இயல்பாகவே கடல் உணவுகளில்இருந்து வேறு பட்டு தனி ருசியும் மணத்துடனும் இருக்கும். அவாகயில் நண்டை சேர்த்து சூப்செய்தல் கேட்கவா வேண்டும், இதன் சுவைக்கு அளவே இல்லை. வாங்க இதை எப்படி செய்வது என்றுபார்ப்போம்..

Ingredients:

  • 1/4 கிலோ நண்டு
  • 2 டீஸ்பூன் மிளகுத் தூள்
  • 1 டீஸ்பூன் சீரகத் தூள்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 தக்காளி
  • 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
  • 1 கைப்பிடி கொத்தமல்லி தழை
  • உப்பு

Equipemnts:

  • 1 பெரிய பாத்திரம்

Steps:

  1. முதலில் நண்டின் ஓட்டை எடுத்து கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
  2. பிறகு ஒரு பாத்திரத்தில் நண்டைப் போட்டு தண்ணீர் சேர்த்து,10 நிமிடம் வேக வைத்துக் கொள்ளவும்.
  3. வெந்த நண்டின் சதை பகுதியை ஒரு பாத்திரத்தில் போட்டு உதிர்த்துக் கொள்ளவும். பின்னர் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
  4. நண்டு கறியில் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து பிறகு அதில் மிளகுத் தூள், சீரகத் தூள், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, கொத்தமல்லி தழை, உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும்.
  5. பிறகு சூடாக பரிமாறவும். சுவையான நண்டு மிளகு சூப் தயார்!!!