சூப்பரான டிபன் பாக்ஸ் ரெசிபி சாப்படான முட்டை சப்பாத்தி இப்படி செஞ்சி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

Summary: ஒரே மாதிரியான சப்பாத்தி செய்து போரடித்துபோனவர்களுக்கு இது போல வித்தியாசமாக ஸ்டஃப்ட் முட்டை சப்பாத்தி செய்து கொடுத்தால் நன்றாகசாப்பிடுவர். முட்டை கொண்டு செய்யப்படும் இந்த சப்பாத்தி அனைவரும் விரும்பி ரசித்து,ருசித்து சாப்பிடும் படியாக இருக்கப் போகிறது. நீங்களும் உங்களிடம் முட்டை இருந்தால்டக்குனு இதை செஞ்சு பாருங்க, எல்லோரும் உங்களை நிச்சயமாக பாராட்டுவாங்க!

Ingredients:

  • 2 கப் கோதுமை மாவு
  • 1 முட்டை
  • 1/4 தேக்கரண்டி மிளகு
  • 1/4 தேக்கரண்டி சீரகத்தூள்
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 தோசை கல்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. கோதுமை மாவில் உப்பு, சிறிது எண்ணெய் போட்டு தண்ணீர் விட்டு பிசைந்துக் கொள்ளவும். முட்டையில் உப்பு, மிளகு சீரகத்தூள் போட்டு அடித்துக் கொள்ளவும்.
  2. ஒரு உருண்டை மாவை எடுத்து சப்பாத்தி பலகையில் வைத்து பெரிய சப்பாத்தியாக பரத்தவும்
  3. அடுப்பில் தோசைக்கல்லை வைத்து பரத்திய * சப்பாத்தியை போட்டு அடித்து வைத்த முட்டையை ஊற்றி எல்லா பக்கமும் படும்படி ஒரு கரண்டியால் தேய்த்து விடவும். * பின் சப்பாத்தியை படத்தில் உள்ளது போல் நான்கு பக்கமும் மடிக்கவும்.
  4. மிதமான தீயில் இரு பக்கமும் எண்ணெய் விட்டு வேக விடவும். நடுவில் தோசை திருப்பியால் லேசாக கீறவும் (இப்படி கீறினால் உள்ளே இருக்கும் முட்டை வேகும்)
  5. இப்போது ஸ்டஃப்டு சப்பாத்தி ரெடி