நாவில் எச்சி ஊறும் முட்டை மஞ்சூரியன் செய்வது எப்படி ?

Summary: நீங்கள் எளிமையாக மற்றும் வேகமாகவும் உங்கள் வீட்டிலேயே செய்துவிடலாம் இந்த இந்த முட்டை மஞ்சூரியன் நீங்கள் கிரேவியாகவும் செய்து கொள்ளலாம் அல்லது டிரையாக வேண்டுமென்றால் அப்படியும் செய்து கொள்ளலாம். இதன் சுவை அற்புதமாக இருக்கும் ஒரு தடவை நீங்கள் இதை உங்கள் வீட்டில் செய்து பார்த்து விட்டீர்கள் என்றால் அடிக்கடி நீங்களே செய்யும் அளவிற்கு இந்த முட்டை மஞ்சூரியன் இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் இந்த முட்டை மஞ்சூரியனை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு இதன் சுவை அட்டகாசமான முறையில் இருக்கும். இதை சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது அந்த சுவையை வாழ்நாள் முழுவதும் நீங்கள் மறக்க மாட்டீர்கள்.

Ingredients:

  • 4 முட்டை
  • மிளகு தூள்
  • உப்பு
  • ½ tbsp மிளகாய் தூள்
  • ¼ கப் சோள மாவு
  • ¼ கப் மைதா மாவு
  • எண்ணெய்
  • 2 மேசை கரண்டி எண்ணெய்
  • 1 tbsp இஞ்சி
  • 1 tbsp பூண்டு
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 குடை மிளகாய்
  • 2 tbsp சில்லி சாஸ்
  • 2 tbsp தக்காளி சாஸ்
  • 1 tbsp சோயா சாஸ்
  • உப்பு
  • கொத்த மல்லி

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 இட்லி பாத்திரம்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் ஒரு பெரிய பவுளில் நான்கு முட்டைகளை உடைத்து ஊற்றி முட்டைக்கு தேவையான அளவு மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அடித்து கலக்கி கொள்ளுங்கள். பின்பு ஒரு பவுளில் சுற்றிலும் எண்ணெய் தடவி அதில் முட்டையை ஊற்றிக் கொள்ளுங்கள்.
  2. பின்பு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தண்ணீர் கொதித்ததும் அடித்தட்டு அடியில் வைத்து அதற்கு மேல் முட்டை உள்ள பவுலை வைத்து ஒரு 15 நிமிடம் அவித்து எடுத்து, அவித்து எடுத்த முட்டையை சிறு சிறு துண்டகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
  3. பின் முட்டையை பொரிக்க ஒரு பெரிய பவுளில் கால் கப் மைதா மாவு, கால் கப் சோள மாவு மற்றும் அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து பின் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் செய்து கொள்ளவும். பின் இதனுடன் நறுக்கிய முட்டைகளை சேர்த்து நன்கு பிரட்டி ஒரு பத்து நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளுங்கள்
  4. பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் முட்டையை சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின் மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு மேசை கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.
  5. பின் எண்ணெய் சூடு ஏறியதும் ஒரு டீஸ்பூன் பொடியாக நறுக்க இஞ்சி மற்றும் ஒரு டீஸ்பூன் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். பின்பு இதனுடன் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கி கொள்ளவும்.
  6. பின் பொடியாக நறுக்கிய ஒரு குடைமிளகாயும் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள். குடைமிளகாய் நன்றாக வதங்கி வந்ததும் இதனுடன் இரண்டு டீஸ்பூன் சில்லி சாஸ், இரண்டு டீஸ்பூன் தக்காளி சாஸ், ஒரு டீஸ்பூன் சோயா சாஸ் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி விட்டு கொள்ளுங்கள்.
  7. அதன் பின் ஒரு சிறிய பவுளில் ஒரு டீஸ்பூன் சோள மாவு சேர்த்து அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கி அந்த தண்ணீரையும் கடாயில் சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக கிளறிவிட்டு நாம் பொரித்த முட்டையை இதனுடன் சேர்த்து நன்றாக வதக்கி விடுங்கள்.
  8. பின் மசாலா பொருட்கள் உடன் முட்டை நன்கு கலந்தது வெந்ததும் சிறிது நறுக்கிய கொத்தமல்லியை தூவி கடாயை இறக்கி விடுங்கள் அவ்வளவுதான் ஸ்டார் ஹோட்டல் ஸ்டைலில் சுவையான முட்டை மஞ்சூரியன் இனிதே தயாராகிவிட்டது.