KFC சிக்கன் பாப்கார்ன் ரெசிபி இப்படி வீட்டிலயே கூட செஞ்சி பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!

Summary: அசைவ பிரியர்களுக்கு சிக்கன் என்றாலே அவ்வளவு இஷ்டம். சிக்கன் என்றால் பெரியவர் முதல் சிறியவர் வரை யாருக்குதான் பிடிக்காது. அதுவும் சிக்கனில் பாப்கார்ன் சிக்கன் செய்து சாப்பிட்டால் அசத்தலாக இருக்கும். பாப்கார்ன் சிக்கன் பெரும்பாலானோரால் விரும்பி உண்ணப்படும் ஒரு அசைவ துரித உணவு வகை. அதிலும் குறிப்பாக KFC சிக்கனுக்கென்று ஒரு பெரிய பட்டாளமே அடிமை எனவும் கூறலாம். முதலில் அமெரிக்காவில் உதயமான இவை மெல்ல மெல்ல உலகம் முழுவதும் இதனின் மொரு மொருப்பு தன்மை மற்றும் அதீத சுவையால் மிகவும் பிரபலம் அடைந்தது. மைதா மாவு, சோள மாவு, எலும்பில்லாத சிக்கன் ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இது மயோனைஸ், தக்காளி சாஸ், சில்லி சாஸ், ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். இதை ஈவ்னிங் ஸ்னாக்ஸ் ஆகவும் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம்.

Ingredients:

  • 1/2 கி சிக்கன்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் மல்லி தூள்
  • 1 டீஸ்பூன் கரம்‌ மசாலா தூள்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டீஸ்பூன் சோயா சாஸ்
  • 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
  • 1 டீஸ்பூன் தயிர்
  • உப்பு தேவையான அளவு
  • 1/2 கப் மைதா
  • 1/4 கப் கார்ன் பிளவர் மாவு
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் ஓரிகனோ
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 கரண்டி

Steps:

  1. முதலில் சிக்கனை நன்கு சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  2. பிறகு ஒரு பாத்திரத்தில் சிக்கன் மற்றும் சிக்கன் ஊற‌ வைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு கலந்து மூன்று மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
  3. அதன் பிறகு மாவு தயாரிக்க கொடுத்துள்ள பொருட்கள் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
  4. ஊற வைத்த சிக்கனில் ஒரு துண்டை எடுத்து மாவில் போட்டு பிரட்டி அதை குளிர்ந்த தண்ணீரில் முக்கி மீண்டும் மாவில் போட்டு உதிர்த்து எடுத்து வைக்கவும்.
  5. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரட்டி எடுத்த சிக்கனை சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
  6. அவ்வளவுதான் சுவையான சிக்கன் பாப் கான் தயார்.