காலை உணவுக்கு கம்பு வெந்தயக்கீரை ரொட்டி இப்படி செஞ்சி பாருங்கள்!

Summary: உடலுக்கு ஆரோக்கியம் தரும் ரெசிபியைமிக மிக சுலபமான முறையில் செய்து கொடுக்க வேண்டும். அதே சமயம் அந்த ரெசிபி சுவையானதாகவும்இருக்க வேண்டும். குழந்தைகள் விருப்பமாக சாப்பிடும் பொருளாகவும் இருக்க வேண்டும். அப்படிஒரு சூப்பரான  கம்பு வெந்தயக்கீரை ரொட்டி தான்இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம்.   ஆரோக்கியம்தரக்கூடிய வெந்தயக் கீரையை கடைந்து கொடுத்தால், குழம்பு வைத்துக் கொடுத்தால் குழந்தைகள்நிச்சயம் சாப்பிட மாட்டார்கள். இப்படி சிறுதானியதுடன் சேர்த்து செய்து லஞ்சுக்கு பாக்ஸில்போட்டு கொடுத்தால், விரும்பி சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 1/4 கிலோ கம்பு மாவு
  • 1/2 கப் வெந்தயக் கீரை
  • 1/4 கப் கோதுமை மாவு
  • 1/4 டீஸ்பூன் சீரகம்
  • 1/4 டீஸ்பூன் ஓமம்
  • 1/4 டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள்
  • 1/4 கப் தயிர்
  • உப்பு
  • எண்ணெய்
  • வெண்ணெய்

Equipemnts:

  • 1 தோசை கல்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. கம்புமாவு, கோதுமை மாவு, சீரகம், ஓமம், உப்பு, மிளகாய்த்தூள், தயிர், வெந்தயக் கீரை ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவேண்டும்.
  2. தேவைக்கேற்ப நீர் சேர்த்து, சப்பாத்தி மாவு போல பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  3. பிறகு,சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவேண்டும்.
  4. உருண்டையை சப்பாத்தி போல் திரட்டி, சூடான தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் சுட்டு எடுக்கவேண்டும்.
  5. மேலே வெண்ணெய் தடவி பரிமாறவேண்டும்
  6. பரிமாற சுவையான கம்பு வெந்தயக்கீரை ரொட்டி தயார்!