வழக்கம் போல் பூரி செய்வதை நிறுத்தி விட்டு பீட்ருட் பூரி இப்படி செஞ்சி பாருங்க ஒரு மாறுதலாக இருக்கும்!

Summary: பூரி இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும் வட இந்தியாவில் பாஜி எனப்படும் காய்கறி மசாலாவுடன் பரிமாறப்படுகிறது. உருளைக்கிழங்கு மசாலா தவிர பூரியை காய்கறி குருமா, சென்னா மசாலா உடனும் உண்ணலாம். சுண்ட வைத்த பாலில் சர்க்கரை கலந்து பூரிகளை ஊற வைத்து பால் பூரி செய்யலாம். பூரி என்றால் குழந்தைகளுக்கு கொள்ளை பிரியம். குழந்தைகள் மட்டுமில்லை இந்த லிஸ்டில் பெரியவர்களும் உண்டு. இருப்பினும் அதில் சத்தானதாக இருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக உணர்வோம். ஆம் இன்று பூரியை புதுவிதமான முறையில் பீட்ரூட் சேர்த்து தான் செய்ய போகிறோம். பீட்ரூட் பிடிக்காத குழந்தைகளுக்கு பூரியில் பீட்ரூட் சேர்த்து செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 2 கப் கோதுமை மாவு
  • 1 டேபிள் ஸ்பூன் ரவா
  • 1 பீட்ருட்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 பூரி கட்டை

Steps:

  1. முதலில் பீட்ரூட்டை தோல் சீவி துருவி மிக்ஸி ஜாரில் சேர்த்து மையாக அரைத்து அதன்‌ சாறை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  2. பிறகு ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு மற்றும் ரவை சேர்த்து கலந்து கொள்ளவும். ‌ அதன்பிறகு நாம் எடுத்து வைத்துள்ள பீட்ரூட் சாறு, உப்பு மற்றும் சிறிதளவு எண்ணெய் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.
  3. பிசைந்த மாவை 30 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். பின்பு சின்ன உருண்டைகளாக உருட்டி எண்ணெய் தடவி ஐந்து நிமிடம் ஊற வைக்கவும்.
  4. அதன்பிறகு பூரி கட்டையில் ஒவ்வொரு உருண்டைகளாக வைத்து தேய்த்து எடுக்கவும்.
  5. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பூரிகளை ஒவ்வொன்றாக பொரித்து எடுக்கவும்.
  6. அது உப்பி மேலெழும்பி வரும், அதனை மென்மையாக கரண்டியால் அழுத்தவும். பின்னர் பூரியை மறுபக்கம் திருப்பி பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  7. அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான பீட்ரூட் பூரி தயார்.