Summary: ஞாயிற்றுக்கிழமை என்றாலே அசைவம் தான். அதிலும் குறிப்பாக மட்டன், சிக்கன் தான் செய்ய வேண்டுமா என்ன? ஒரு மாற்றத்திற்கு கருவாட்டு குழம்பு செய்யலாம். பிறகு ஒவ்வொரு வாரமும் இதையே செய்ய சொல்லும் அளவிற்கு இதன் மனமும் சுவையும் இருக்கும். கருவாடு உடல் உஷ்ணத்தை குறைக்கும். பொதுவாக அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் இருந்து உஷ்ணம் வெளியேற கருவாட்டை சாப்பிடுவார்கள். கருவாட்டினை அதிக அளவில் எடுத்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும். கருவாட்டின் வாசனை பலருக்கும் அலர்ஜி என்றாலும், அதனை குழம்பாக வைத்த பின் யாராக இருந்தாலும் ஒரு பிடிபிடித்து விடுவார்கள்.