கோவக்காய் முட்டை குழம்பு இப்படி செய்து விட்டால் போதும், ஒரு பருக்கை சாதம் கூட மிச்சம் இருக்காது!

Summary: கறிக் குழம்பையும் மிஞ்சும் சுவையில் மிகவும்அற்புதமான இந்த கோவக்காய் முட்டை குழம்பை சற்று வித்தியாசமாக செய்து பாருங்கள். கோவக்காய்விருப்பி சாப்பிடாதவர்களும் இந்த முறையில் செய்தல் சாப்பிடுவார்கள். கோவக்காய் முட்டைகுழம்பு இந்த முறையில் மசாலா சேர்த்து செய்யும் பொழுது இதன் சுவை அவ்வளவு அட்டகாசமாகஇருக்கும். அதிலும் முட்டையை வேக வைத்து சேர்க்கும் பொழுது அதன் சுவையுடன் இந்த மசாலாவின்சுவையும் சேரும் பொழுது வேறுவிதமான சுவையைக் கொடுக்கும். வாருங்கள் இப்படி கோவக்காய்முட்டை குழம்பு எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Ingredients:

  • 1/4 கிலோ கோவக்காய்
  • 4 வேக வைத்த முட்டை
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/4 டேபிள்ஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1 டீஸ்பூன் சீரக தூள்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. செய்முறை அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கறிவேப்பிலை, பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  2. பின் இஞ்சி பூண்டு விழுதினை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  3. கரம் மசாலா தூள் மற்றும் சீரகத் தூள் ஆகியவற்றைப் வகைகள் போட்டு வதக்கி, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
  4. பின் நறுக்கிய கோவக்காயைப் போட்டு நன்கு கிளறி, உப்பு சேர்த்து லேசாக நீர் தெளத்து மிதமான தீயில் வைத்து கிளறவும்.
  5. அதனுடன் வேக வைத்த முட்டையை போட்டு உடையாமல் கிளறி 5 நிமிடம் மூடி வைத்து இறக்கவும்.
  6. இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் ; இதனை சாதம், சப்பாத்தி மற்றும் தோசைக்கு வைத்து சாப்பிடலாம்