முள்ளங்கி உருளைக்கிழங்கு சேர்த்து இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்கள்! மதிய உணவுக்கு பக்காவான பொரியல் ரெசிபி!

Summary: புதுவிதமாக உருளைகிழங்கு சேர்த்து முள்ளங்கிகீரை பொரியலை இப்படி மட்டும் செய்து பாருங்கள். முள்ளங்கிகீரையில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் பல நிறைந்துள்ளன ஆனால் முள்ளங்கிகீரை சுவை பலருக்கும் விருப்பமானதாக இருப்பதில்லை.எனவே பெரும்பாலான வீடுகளில் முள்ளங்கி சமைப்பதை தவிர்த்தே வருகின்றனர். ஆனால் உருளைக்கிழங்குபொரியல் போன்ற சுவையில் முள்ளங்கிகீரையில் உருளையையும் சேர்த்து செய்து  கொடுத்தால் அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள்.வாங்க எப்படினு பதிவை படிச்சு தெரிஞ்சிக்கலாம்

Ingredients:

  • 1 கட்டு முள்ளங்கி கீரை
  • வேக வைத்த உருளைக்கிழங்கு
  • 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள்
  • 1/4 கப் தேங்காய்த்துருவல்
  • 2 பல் பூண்டு
  • 1 வெங்காயம்
  • 1/4 தேக்கரண்டி சீரகத்தூள்
  • மஞ்சள்த்தூள்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. வேக வைத்த உருளைக்கிழங்கை சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் கீரையை கழுவி பொடியாக நறுக்கவும்
  2. முதலில் தேங்காய், மிளகாய்த்தூள், பூண்டு, சீரகத்தூள், மஞ்சள்த்தூள் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டுகொரகொரப்பாக அரைக்கவும்.
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெங்காயம் தாளிக்கவும்.
  4. வெங்காயம் வதங்கியதும் கீரையை போட்டு உப்பு சேர்த்து மூடி மிதமான தீயில் வதக்கவும். வதங்கியதும் வேக வைத்து நறுக்கிய உருளைக்கிழங்கை அதில் போட்டு வதக்கவும்
  5. பின் அரைப்பை போட்டு மிதமான தீயில் வதக்கி இறக்கவும். இது ரசம் சாதம் மற்றும் சப்பாத்தி, பிரெட்டுடன்சாப்பிட பொருத்தமாக இருக்கும்.