சுவையான இன்ஸ்டன்ட் பாசி பருப்பு தோசை செய்வது எப்படி ?

Summary: நாம் மீத மாவில் தோசை சுடும் பொழுது அந்த பொருள்களை நீண்ட நேரம் ஊற வைத்து பின் அரைத்து பின் புளிக்க வைத்து இப்படி தோசை சுடுவதற்கு பதிலாக. உடனடியாக உங்களுக்கு தோசை சுட வேண்டும் என நினைப்பவர்கள் இந்த சுவையான பாசி பருப்பு தோசை செய்து பார்க்கலாம். இந்த தோசையில் அதிக அளவு புரோட்டின் சத்துக்கள் நிறைந்திருப்பதால் டையட்டில் இருப்பவர்கள் தாராளமாக இந்த தோசையை செய்து சாப்பிடலாம். இந்த தோசையை உங்கள் வீட்டில் இருக்கும் பெரியோர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்குமே பிடித்த வகையில் இருக்கும்.

Ingredients:

  • 1 கப் பாசி பருப்பு
  • ¼ கப் அரிசி மாவு
  • 1 துண்டு இஞ்சி
  • 1 பச்சை மிளகாய்
  • ½ tbsp சீரகம்
  • ¼ tbsp பெருங்காய தூள்
  • உப்பு
  • தண்ணீர்
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்
  • 1 தோசை கல்

Steps:

  1. முதலில் ஒரு கப் பாசிப்பருப்பு எடுத்துக் கொண்டு அதனை ஒரு பவுளில் சேர்த்து அதனுடன் சிறிது அளவு தண்ணீர் ஊற்றி இரண்டு மூன்று முறை நான்கு அலசி எடுத்துக் கொள்ளுங்கள்.
  2. பின்பு இதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு 45 நிமிடங்கள் நன்றாக ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு பாசி பருப்பு 45 நிமிடங்கள் நன்றாக கூறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொள்ளவும்.
  3. பின் இதனுடன் அரிசி மாவு, ஒரு துண்டு இஞ்சி, ஒரு பச்சை மிளகாய், அரை டீஸ்பூன் சீரகம், கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். மாவை தோசை மாவு பதத்திற்கு அரைத்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து லூசாக மாவு இருக்கும் படி அரைத்துக் கொள்ளுங்கள்.
  4. பின்பு தோசை கல்லை அடுப்பில் வைத்து இரண்டு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கல் சூடேறியதும் ஒரு கரண்டி தோசை மாவு ஊற்றி இரண்டு புறமும் பொன்னிறமாக வேகவைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  5. அவ்வளவுதான் மொறு மொறுனு சுவையான பாசி பருப்பு தோசை இனிதே தயாராகி விட்டது. இதனுடன் கார சட்னி வைத்து சாப்பிடும் பொழுது இதன் சுவை அட்டகாசமாக இருக்கும் நீங்களும் இதை செய்து பாருங்கள்.