சுட சுட சாதத்துடன் தொட்டு சாப்பிட முருங்கைக்கீரை கேரட் பொரியல் அசத்தலான சுவையில் இப்படி செஞ்சி பாருங்க!

Summary: குழந்தைகள் முருங்கைக் கீரையையும் சாப்பிட மாட்டார்கள் . கேரட்டையும் சாப்பிட மாட்டார்கள். பெரியவர்களுக்கும் போர் அடித்து விடும். கொஞ்சம் வித்தியாசமாக முருங்கைக்கீரை உடன் கேரட்டை போட்டு இந்தமுறையில் ஒரு பொரியல் செய்து பாருங்கள். சுவை சும்மா அட்டகாசமா இருக்கும். ரசம் சாதம் சாம்பார் சாதம் எதற்கு வேண்டுமென்றாலும் இதை தொட்டு சாப்பிட்டுக் கொள்ளலாம். முருங்கைக் கீரையை கேரட் உடன் சேர்த்து செய்யும்பொழுது  தேவையான உணவையும் ஊட்டச்சத்தையும் அளிக்கின்றன.வாருங்கள் இந்த  முருங்கைக்கீரை கேரட் பொரியலைஎவ்வாறு செய்ய வேண்டும் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Ingredients:

  • 4 கப் முருங்கைக்கீரை
  • 1 கப் கேரட் துருவல்
  • 1/2 கப் தேங்காய் துருவல்
  • 1 தேக்கரண்டி மிளகாய்பொடி
  • 2 பல் பூண்டு
  • உப்பு
  • 1 மேசைக்கரண்டி எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முருங்கைக்கீரையை ஆய்ந்து, அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கேரட்டை துருவி வைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலுடன் மிளகாய் பொடி மற்றும் பூண்டு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக நீர் சேர்க்காமல் பொடிக்கவும்.
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி கீரையை போட்டு 3 நிமிடங்கள் வதக்கவும். கீரை பாதியளவு வதங்கியதும் உப்பு மற்றும் கேரட் துருவலை சேர்த்து வதக்கவும்.
  3. அதன் பின்னர் இரண்டும் சேர்ந்து நன்கு வதங்கியதும் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் கலவையை சேர்த்து வதக்கவும்.
  4. தேங்காய் கலவையை சேர்த்து நன்கு பிரட்டி பச்சை வாசனை அடங்கியதும் இறக்கி விடவும்.
  5. சுவையான எளிதாக செய்யக் கூடிய முருங்கைக்கீரை கேரட் பொரியல் ரெடி