ருசியான இறால் சுரைக்காய் குழம்பு கிராமத்து முறையில் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!

Summary: இறால் சுரைக்காய் குழம்பு என்பது கிராமத்தில் செய்யப்படும் ஒரு சுவையான இறாலைக் கொண்டு சமைக்கப்படும் அசைவ உணவாகும். கடல் உணவுகளில் பெரும்பாலான சமையல் வகைகள் மிகக் குறைந்த பொருட்களுடன் செய்யப்படும் மிகவும் எளிமையான செய்முறை, ஆனால் மிகவும் சுவையானவை. அதே போல் இந்த இறால் உணவு செய்முறையும் எளிதானவை , இறால்களைப் பயன்படுத்துவதன் மூலம் சுரைக்காய் சுவை முழுமையான மாற்றத்தைப் பெறுகிறது. இறால்கள் சேர்த்ததும் இந்த சுரைக்காய் அதீத மணத்துடன் இருக்கும். இறால் சுரைக்காய்குழம்பு இந்த முறையில் செய்து அனைவரையும் அசத்துங்கள். வாங்க இதை எப்படி செய்வது என்றுபார்ப்போம்.

Ingredients:

  • 1/2 கிலோ இறால்
  • 1/4 கிலோ சுரைக்காய்
  • 250 கிராம் வெங்காயம்
  • 250 கிராம் தக்காளி
  • 2 பச்சை மிளகாய்
  • 1 இணுக்கு கறிவேப்பிலை
  • 1 தேக்கரண்டி மிளகாய்த் தூள்
  • புளி
  • 3 தேக்கரண்டி மல்லி தூள்
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 6 பல்லு பூண்டு
  • 1 குழிக்கரண்டி எண்ணெய்
  • 1 தேக்கரண்டி வடகம்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பின்னர் புளியை கரைத்து வைக்கவும்.
  2. பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வடகம் தாளித்து பூண்டை தட்டி போட்டு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவேண்டும்.
  3. பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்வெங்காயம், பச்சை மிளகாய் வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு குழையும் வரை வதக்கவும்.
  4. அதனுடன் நறுக்கிய சுரைக்காய் மற்றும் இறால் சேர்த்து வதக்கவும். பின்பு மிளகாய்த் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
  5. இந்த கலவையில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். குழம்பு கொதித்ததும் மிளகுத் தூள் மற்றும் புளிக் கரைசலை சேர்க்கவும்.
  6. தீயின் அளவை மிதமாக வைத்து கொதிக்க விடவும். கலவை 10 நிமிடம் கொதித்ததும் இறக்கி கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும். இறால் சுரைக்காய் குழம்பு தயார்.