உடனடியா இட்லி சாம்பார் பத்து நிமிடத்தில்  பக்காவான சுவையில் இப்படி கூட செய்யலாம்!

Summary: காலைல குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்பனும் ஹஸ்பண்ட ஆபீஸ் அனுப்பனும் இந்த டென்ஷன்ல இட்லிக்கு சாம்பார் வைக்கணும்னு நினைச்சாலே தலையே சுத்திடும். ஏன்னா இட்லிக்கு சாம்பார் வைப்பதற்கு குறைந்தது அரை மணி நேரத்துக்கு மேலயாவது ஆகும் . அதுவும் பருப்பு வெந்து காய் வெந்து ஒரே டென்ஷனா இருக்கும். இதெல்லாம் லஞ்ச் வேற தயார் பண்ணனும் இவ்ளோ டென்ஷனா இருக்கும்போது எப்படி சுலபமா பத்தே நிமிஷத்துல இட்லிக்கு சாம்பார் வைக்க போறது அப்படின்னு பார்க்கலாம். வாங்க அதிரடி சாம்பார் உடனடியாக வைக்கிறதுக்கு பக்காவான டேஸ்ட்ல செய்யறது எப்படினு தெரிஞ்சுக்கலாம்.

Ingredients:

  • 12 கப் பாசிப்பருப்பு
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 2 பச்சைமிளகாய்
  • 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1 ஸ்பூன் குழம்பு மிளகாய்தூள்
  • 1 உருளைக்கிழங்கு
  • 1 கேரட்
  • 1/2 கப் தேங்காய்
  • உப்பு
  • கொத்தமல்லி
  • எண்ணெய்
  • 1 ஸ்பூன் கடுகு
  • 14 ஸ்பூன் வெந்தயம்
  • 14 ஸ்பூன் சீரகம்
  • 1 கொத்து கறிவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் பாசிப்பருப்பை கழுவி விட்டு ஒரு பத்து நிமிடம் ஊற வைக்கவும். இந்த பாசி பருப்பு ஊறுவதற்குள் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், பச்சை மிளகாய் , சீரகம் சேர்த்து அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  2. பிறகு வெங்காயம், தக்காளி, கேரட், உருளைக்கிழங்கு போன்றவற்றை பொடியாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  3. இப்போது அனைவரும் வீட்டிலும் குக்கர்கள் உபயோகபடுத்துகிறார்கள். அதனால் மிகவும் சுலபமாக இந்த சாம்பாரை வைத்து விடலாம்.
  4. அடுப்பில் ஒரு குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம் சேர்த்து நன்றாக தாளிக்கவும்.
  5. பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக பொன்னிறமாக வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள உருளை கிழங்கு, கேரட் சேர்த்து நன்றாக கிளறி விட்டு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.
  6. அதில் மிளகாய்தூள் சேர்த்து கிளறி பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் ஊற்றி சாம்பாருக்கு தேவையான தண்ணீரை ஊற்றி கொதிக்கவிடவும்.
  7. சாம்பார் கொதித்ததும் தேவையான அளவு உப்பு போட்டு குக்கரில் இரண்டு விசில்கள் வரும் வரை வைத்து மூடவும்.
  8. குக்கரில் விசில் வந்து முடிந்த பிறகு குக்கரை திறந்த கொத்தமல்லி தழை தூவி கிளறி இறக்கினால் சூடான இட்லி சாம்பார் தயார்.
  9. இந்த அதிரடி உடனடி இட்லி சாம்பார் இட்லி மற்றும் தோசைக்கும் வைத்து சாப்பிட அருமையாக இருக்கும்.