மதியம் சுட சுட சாதத்துடன் போட்டு சாப்பிட தக்காளி கத்திரிக்காய் கடைசல் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

Summary: தென் இந்திய உணவு வகைகளில் கத்தரிக்காய் தவிர்க்க முடியாதது. சாம்பார், கூட்டு, குழம்பு என ஏதாவது ஒரு ரூபத்தில் கத்தரிக்காயை பயன்படுத்துவோம். பலருக்கு கத்தரிக்காய் வாசம் இருந்தால்தான், சைவச் சாப்பாடு களை கட்டும். இன்று நாம் பார்க்கப்போகும் ரெசிபி சைவ பிரியர்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்த கத்திரிக்காவை வைத்துதான் பார்க்கப்போகிறோம். நாம் இன்று வரை கத்திரக்காவில் குழம்பு, எண்ணெய் கத்திரிக்காய் போன்றவை தான் செய்து சாப்பிட்டுருப்போம். ஆனால் இன்று பார்க்கப்போகும் ரெசிபியை ஒருமுறை செய்து பாருங்கள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும். கத்தரிக்காய் பிடிக்காதவர்கள் என்று சொல்பவர்கள் கூட இந்த கத்தரிக்காய் கடைசலை விட்டு வைக்க மாட்டார்கள்.

Ingredients:

  • 7 கத்திரிக்காய்
  • 5 தக்காளி
  • 4 பெரிய வெங்காயம்
  • 4 காய்ந்த மிளகாய்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • தேவையான அளவு உப்பு
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் கடலை பருப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 கரண்டி

Steps:

  1. முதலில் கத்திரிக்காய், தக்காளி வெங்காயத்தை தண்ணீர் நன்கு அலசி விட்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலை பருப்பு, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  3. பின் வெங்காயம், மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பின் கத்தரிக்காயை சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்றாக வதக்கவும்.
  4. இரண்டு நிமிடங்கள் கழித்து தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு கலந்து விட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
  5. இது நன்கு கொதித்ததும் ஒரு பருப்பு கடையும் மத்தால் ஒரு கடைசல் கடையவும்.
  6. அவ்வளவுதான் சுவையான தக்காளி கத்திரிக்காய் கடைசல் தயார்.