மதிய உணவுக்கு ஏற்ற அரைக்கீரை பொரியல் செய்வது எப்படி ?

Summary: பொதுவாக கீரையில் ஊட்டச்சத்து அதிகம் நிறைந்திருக்கும். இத்தகைய கீரையை சிலருக்கு கடைந்து சாப்பிட பிடிக்கும். பலருக்கு பொரியல் செய்து சாப்பிட பிடிக்கும் அதிலும் அரைக்கீரையில் பொரியல் செய்து சாப்பிட்டால் தான் சுவையாக இருக்கும். அந்த வகையில் இந்த அரைக்கீரை பொரியல் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டிருக்கு அதனை படித்து பார்த்து நீங்களும் செய்து பாருங்கள்.

Ingredients:

  • 1 கட்டு அரைக்கீரை
  • 2 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு
  • 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  • உப்பு
  • 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • ½ டேபிள் ஸ்பூன் கடுகு
  • ½ டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 2 பச்சை மிளகாய்
  • கறிவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் கீரையை ஆய்ந்து தண்ணீரில் நன்றாக கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும். அடுத்து வெங்காயம், பச்சை மிளகாய், இரண்டையும் நீளவாக்கில் வெட்டி வைக்கவும்.
  2. துவரம் பருப்பை 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும்.
  3. அடுப்பில் காடையை வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, போட்டு தாளிக்கவும்.
  4. கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம், சேர்த்து வதக்கவும்.
  5. வெங்காயம் பொன்னிறமானதும் கீரை மற்றும் பருப்பை சேர்த்து கிளறவும்.
  6. பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து கீரை வேகும் வரை கிளறவும்.
  7. இறுதியில் தேங்காய் துருவல் சேர்த்து உப்பு சரி பார்த்து அடுப்பை அணைக்கவும்.
  8. இப்பொழுது சுவையான அரைக்கீரை பொரியல் ரெடி.